75 வயது முதியவருக்கு பார்வை பறிபோக காரணமான அரசு டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

75 வயது முதியவருக்கு பார்வை பறிபோக காரணமான அரசு டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

75 வயது முதியவருக்கு கண் பார்வை பறிபோனதற்கு காரணமான அரசு டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், அந்த முதியவருக்கு தகுந்த இழப்பீடு வழங்கவும் சுகாதாரத்துறைச் செய லருக்கு உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 75 வயது முதியவரான ஆர்.மாரிமுத்து கடந்த 2007 டிசம்பர் 27-ல் சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை செய்தார். அதன்பின் அவருக்கு கண் பார்வை பறிபோனது. இதற்கு தனக்கு அறுவை சிகிச்சை செய்த அரசு டாக்டர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள்தான் காரணம் எனக்கூறி முதல்வரின் தனிப்பிரிவிற்கு புகார் மனு அனுப்பினார்.

அதன்பேரில் அவரது புகார் மனு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கும், அங்கிருந்து தாம்பரம் வட்டாட்சிய ருக்கும், அங்கிருந்து ஆலந்தூர் வட்டாட்சியருக்கும், அங்கிருந்து பெரும்புதூர் வட்டாட்சியருக்கும் மாறி, மாறி அனுப்பி வைக்கப்பட்டது. ஒருவழியாக அவருக்கு 50 சென்ட் நிலம் வழங்க காஞ்சிபுரம் ஆட்சியர் உத்தரவிட்டும், இதுவரை அவருக்கான நிலத்தை அதிகாரிகள் வழங்கவில்லை. இதனால் தனக்கு பார்வை பறிபோக காரணமாக இருந்த அரசு டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவும், தனக்கு இழப்பீடு வழங்கவும் உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் பிறப்பித்த உத்தர வில், ‘‘பார்வை பறிபோன 75 வயது முதியவரை எந்தளவிற்கு அலைய வைக்க முடியுமோ அந்தளவிற்கு அதிகாரிகள் அலைய வைத்துள்ள னர். அரசு அதிகாரிகள் பெறும் மனுக் களை 3 மாதத்திற்குள் பரிசீலித்து தகுந்த உத்தரவுகளைப் பிறப் பிக்க வேண்டும். ஆனால் கடந்த 2009-ல் இருந்து தனக்கு இழப்பீடு கேட்டும், தனது பார்வை பறிபோனதற்கு கவனக்குறைவாக செயல்பட்ட டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வும் அவர் தொடர்ந்து போராடி வரு கிறார். தேவையற்ற காலதாமதத் திற்கு அரசு அதிகாரிகள் தான் பொறுப்பேற்க வேண்டும். எனவே மனுதாரர் புதிதாக ஒரு மனுவை அளிக்க வேண்டும். சுகாதாரத் துறைச் செயலர் இதுதொடர்பாக ஒரு தனி அதிகாரியை நியமித்து 8 வாரங்களுக்குள் விசாரணை நடத்த வேண்டும்.

அந்த 75 வயது முதியவருக்கு அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் யார்? மருத்துவ ஊழியர்கள் யார்? என்பதை சுகாதாரத் துறைச் செயலர் கண்டுபிடித்து அவர்களிடம் கவனக் குறைவாக செயல்பட்டதற்கு விளக்கக் கடிதம் எழுதி வாங்க வேண்டும். அதில் அவர்கள் மீது ந டவடிக்கை எடுப்பதற்கான முகாந்திரம் இருந்தால் துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் முதியவருக்கு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும்’’ என உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in