செங்கல்பட்டு மாவட்ட புதிய எஸ்.பி.யாக பிரதீப் பொறுப்பேற்பு

அ.பிரதீப்
அ.பிரதீப்
Updated on
1 min read

செங்கல்பட்டு மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக அ.பிரதீப் பொறுப்பேற்றார்.

செங்கல்பட்டு மாவட்டம், கடந்த 2019 நவம்பர் 29-ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து பிரித்து தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கண்ணன் நியமிக்கப்பட்டார்.

அவரைத் தொடர்ந்து சுந்தரவர்த்தனம், விஜயகுமார், அரவிந்தன், சுகுணாசிங் ஆகியோர் எஸ்.பி.யாக பணியாற்றினர். இந்நிலையில் உயர் படிப்புக்காக சுகுணா சிங் வெளிநாடு சென்றதால் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகர் கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு செயின்ட் தாமஸ் மவுண்ட் காவல் துணை ஆணையராக பணியாற்றி வந்த அ.பிரதீப், செங்கல்பட்டு மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.

தொடர்ந்து அவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in