

கேரள மாநிலம் கேரலாயி வனப் பகுதியில் பெண் உட்பட 3 மாவோயிஸ்ட்களை போலீஸார் சுட்டுக் கொன்றனர்.
நீலகிரி மாவட்டத்தை ஒட்டி யுள்ள கேரள மாநிலத்தில் வய நாடு, மலப்புரம், கண்ணூர் மாவட் டங்களிலும், கர்நாடக மாநிலத் தில் குடகு, ஷிமோகா, குதிரே முக் உள்ளிட்ட பகுதிகளிலும் மாவோயிஸ்ட்கள், நக்சலைட் களின் நடமாட்டம் உள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரித் துள்ளது. இதையடுத்து, காவல் துறையினரும், அதிரடிப்படை யினரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் அருகே கேரலாயி வனப் பகுதியில் படுக்கா என்ற இடத்தில் நேற்று ஒரு பெண் உட்பட 3 பேரை கேரள மாநில மாவோயிஸ்ட் தேடுதல் ‘தண்டர்போல்ட்’ போலீஸார் சுட்டுக் கொன்றனர். இறந்த 3 பேரும் மாவோயிஸ்ட்கள் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
போலீஸார் கூறும்போது, ‘‘மலப்புரம் கேரலாயி வனப் பகுதி யில் 60 பேர் அடங்கிய தண்டர் போல்ட் போலீஸார் மாவோ யிஸ்ட் தேடுதல் பணியில் ஈடுபட்ட போது, அங்கு மாவோயிஸ்ட்கள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போது, மாவோயிஸ்ட் தாக்குதல் நடத்தினர். பதில் தாக்குதல் நடத்தினோம். இதில், 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். 4 பேர் தப்பிவிட்டனர்.
சுட்டுக் கொல்லப்பட்டவர் களின் அடையாளம் கண்டறியப் பட்டுள்ளது. இறந்தவர்கள் சோமன், தமிழகத்தைச் சேர்ந்த சுப்பு தேவராஜ், பெண் அஜிதா என தெரியவந்துள்ளது.
3 பேரின் உடல்களும் வனப் பகுதியிலேயே உள்ளன. கேரள போலீஸ் உயர் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (இன்று) வந்து ஆய்வு நடத்திய பின்னரே, உடல்கள் அப்புறப்படுத்தப்படும் என போலீஸார் தெரிவித் தனர்.
மாவோயிஸ்ட் உடனான சண்டையில் தப்பிய 4 பேர், அருகே உள்ள தமிழக எல்லையான நீலகிரி மாவட்டத்தினுள் நுழை யாமல் இருக்க, எல்லையில் உள்ள நாடுகானி, எருமாடு, பாட்டவயல், குந்தலாடி ஆகிய சோதனைச்சாவடிகளில் கண் காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணி பலப்படுத்தப்பட்டுள்ளது.