

திருவாலங்காடு அருகே மகனை கடித்த பாம்பை எடுத்துக் கொண்டு தந்தை மருத்துவமனைக்கு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மற்றொரு சம்பவத்தில் அண்ணன் உயிரிழந்த நிலையில் தம்பியும் இறந்தார்.
திருவாலங்காட்டை அடுத்த கொல்லக்குப்பம் கிராமத்தில் வசித்து வருபவர் மணியின் மகன் முருகன் (8). நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, நள்ளிரவில் கண்ணாடி விரியன், கட்டுவிரியன் பாம்பு முருகனை கடித்தது. இதைப் பார்த்த மணி 2 பாம்புகளையும் அடித்துக் கொன்றார்.
பின்னர், தனது மகனுடன் அந்தப் பாம்புகளையும் கையில் எடுத்துக் கொண்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கும் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கும் சென்றார்.
அங்கும் பாம்புகளை எடுத்துச் சென்றுள்ளார். அங்கு சிறுவன் முருகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாம்புகளுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தம்பி உயிரிழப்பு: பெரியபாளையம் அருகே பாம்பு கடித்து அண்ணன் ரமேஷ் உயிரிழந்த நிலையில், தம்பி தேவராஜும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.