

சென்னை: உச்ச நீதிமன்ற அறிவுரை, வழிகாட்டுதலின்படி அரசு விளம்பரங்களை முறைப்படுத்தி செயல்படுத்த கருத்துகளை அனுப்பலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற அறிவுரை மற்றும் வழிகாட்டுதலின்படி, அரசு விளம்பரங்களை முறைப்படுத்தி செயல்படுத்த மூவர் குழு கூட்டம் தலைமைச் செயலகத்தில் உள்ள செய்தி மக்கள் தொடர்பு இயக்குநர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
மூவர் குழு தலைவரான ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கே.நந்தகிஷோர், உறுப்பினர் செயலர் ஐஏஎஸ் அதிகாரி வீ.ப.ஜெயசீலன், பொது மேலாளர் சிவா மெய்யப்பன், மூத்த நிருபர் டி.சேகர் ஆகியோர் கலந்துகொண்டனர். அரசு விளம்பரங்களை முறைப்படுத்துவது மற்றும் அரசின்விளம்பர கொள்கையை முறைப்படுத்தி செயல்படுத்துவதற்கான கருத்துகளை tnadvtcommittee@gmail.com என்ற இமெயில் முகவரிக்கு அனுப்பலாம் என்று தமிழக செய்தி மக்கள் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.