Published : 08 Oct 2022 06:24 AM
Last Updated : 08 Oct 2022 06:24 AM
திருப்பத்தூர்: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் பத்திரப்பதிவு செய்தவரிடம் ரூ.1,300 கட்டணத்துக்கு போலி ரசீது மூலம் ரூ.21,250 வசூலித்ததாக சார்பதிவாளர் புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பத்தூர் அருகே தெற்குபட்டு கிரா மத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் அதே கிராமத்தில் உள்ள ஒரு இடத்தை, கடந்த மாதம் திருப்பத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளார். இதற்காக பத்திரப்பதிவு அலுவலகம் அருகே கணினி மையம் வைத் திருந்த ஒருவரிடம் ஆவணங்களைத் தயார் செய்துள்ளனர்.
பத்திரப் பதிவுக்கு, முத்திரைத் தீர்வைக் கட்டணம் ரூ.12,450, பதிவுக் கட்டணம் ரூ.7,650 உட்பட மொத்தம் ரூ.21,250 என கணினி மைய உரிமையாளர் ரசீது கொடுத்துள்ளார். அந்த ரசீதில் சார் பதிவாளர் அலுவலகம் சீல், அதிகாரி கையெழுத்தும் இருந்துள்ளது. மேலும் ஆவணம் தயாரித்ததற்கான செலவையும் சேர்த்து ரூ.32 ஆயிரத்தை ஆறுமுகத்திடம் கணினி மைய உரிமையாளர் வாங்கியுள்ளார். மொத்தம் ரூ.27,500 மதிப்புள்ள இடத்துக்கு ரூ.32,000 வசூலித்ததால், சந்தேகமடைந்த ஆறுமுகம், சார் பதிவாளர் அலுவலகத்தில் விசாரித்துள்ளார். அப்போது பதிவுக் கட்டணம் ரூ.1,300 மட்டுமே செலுத்த வேண்டுமெனத் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து தனக்கு போலி ரசீது கொடுத்து பணம் வசூலித்த கணினி மைய உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டு மென சார் பதிவாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அதனடிப்படையில் சார்-பதிவாளர் சூரியபிரபா திருப்பத்தூர் நகர் போலீஸாரிடம் புகார் கொடுத்தார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சுந்தரமகா லிங்கம் விசாரித்து வருகிறார். இதுகுறித்து சார் பதிவாளர் சூர்யபிரபாவிடம் கேட்டபோது, ‘ரசீது குறித்து விசாரிக்க போலீ ஸாரிடம் புகார் கொடுத்துள்ளேன்’ என்று கூறினார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சுந்தரமகா லிங்கத்திடம் கேட்டபோது, ‘புகார் குறித்து விசாரித்து வருகிறேன்’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT