

சென்னை அண்ணா அறிவாலயத் தில் உள்ள கட்டிடங்களுக்கு கூடுதல் சொத்து வரி செலுத்த வேண்டும் என்று சென்னை மாநக ராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அண்ணா அறிவாலய வளாகத் தில் உள்ள கலைஞர் அரங்கம், அலுவலகம் உள்ளிட்ட மூன்று கட்டிடங்களுக்கு மாநகராட்சி சொத்து வரியை மறு மதிப்பீடு செய் தது. அதன்படி, கலைஞர் அரங் கத்துக்கு இதுவரை ரூ.91,246 வசூல் செய்யப்பட்டு வந்தது. இனி ரூ.14.4 லட்சமாக உயர்ந்தப் பட்டுள்ளது. இதுவரை கலைஞர் அரங்கத்துக்கு சதுர அடி வீதம் சொத்துவரி கணக்கிடப் பட்டு வந்தது. இனி ஆறு வருடங் களுக்கு ஒரு முறை நிர்ணயித்த தொகையை கட்டும் முறை அமலாகிறது.
மேலும், 90,628 சதுர அடியில் உள்ள கட்டிடத்துக்கு இதுவரை ரூ.82,192 வசூலிக்கப்பட்டது. இது தற்போது ரூ.10,33,025 ஆக உயர்ந்துள்ளது. 23,659 சதுர அடியில் கட்டப்பட்ட கட்டிடத் துக்கு இதுவரை ரூ. 1,62,517 வசூ லிக்கப்பட்டு வந்தது. இது ரூ.2,82,885 ஆக உயர்த்தப் பட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி கூறியதாவது: 10 ஆயி ரம் சதுர அடிக்கு மேல் உள்ள சொத்துக்களின் வரியை மாநக ராட்சி மறு மதிப்பீடு செய்திருந் தது. அதன்படி, புதிய சொத்து வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 2008-09-ம் ஆண்டின் கடைசி ஆறு மாதங்கள் முதல் இந்த புதிய கட்டணம் பொருந்தும். இவ்வாறு அவர் கூறினார்.
அண்ணா சாலையில் ஒரு சதுர அடிக்கு மூன்று மதிப்புகள் உள்ளன. ஜெமினி மேம்பாலம் அருகில் உள்ள பகுதிகளில் ஒரு சதுர அடிக்கு சுமார் ரூ.13 சொத்துவரி நிர்ணயிக்கப்படுகிறது. அண்ணா அறிவாலயம் உள்ள பகு தியில் சதுர அடிக்கு சுமார் ரூ.9, சைதாப்பேட்டையில் ஒரு சதுர அடிக்கு சுமார் ரூ.6 வசூலிக்கப் படுகிறது.
10 ஆயிரம் சதுர அடிக்கு மேல் உள்ள சொத்துக்களுக்கு, மறு மதிப்பீடு செய்யப்பட்ட தொகையை கட்டுமாறு மாநக ராட்சி நோட்டீஸ் அனுப்ப உள்ளது.