புதிய 500 ரூபாய் நோட்டு எப்போது தமிழகத்தில் புழக்கத்துக்கு வரும்? - சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

புதிய  500  ரூபாய் நோட்டு எப்போது தமிழகத்தில் புழக்கத்துக்கு வரும்? - சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி
Updated on
1 min read

தமிழகத்தில் ரூ.500 புதிய நோட்டு எப்போது புழக்கத்துக்கு வரும் என கேள்வி எழுப்பியுள்ள உயர் நீதிமன்றம், ரூ.500 நோட்டு சரளமாக பொதுமக்களுக்கு கிடைத்தால் எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைத்துவிடும் என கருத்து தெரிவித்துள்ளது.

தொடக்க வேளாண்மை கூட்டு றவு வங்கியில் கணக்கு வைத்தி ருக்கும் விவசாயிகளுக்குப் புதிய ரூபாய் நோட்டுக்கள் கிடைக்க வில்லை. பழைய நோட்டுகளை மாற்றிக்கொள்ளவும் முடிய வில்லை எனக்கூறி விழுப்புரம் மாவட்டம் செஞ்சியைச் சேர்ந்த விவசாயி ராமமூர்த்தி என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை கடந்த 14-ம் தேதி அவசர வழக்காக எடுத்து விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், விசாரணையை 16-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

அதன்படி, இந்த மனு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ரிசர்வ் வங்கி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் முறைகேடுகள் நடப்ப தாக புகார்கள் வந்ததால்தான் அந்த வங்கிகளுக்கு அதிகப்படி யான பணம் அனுப்புவதை நிறுத்தி வைத்திருந்தோம். தற்போது விழுப்புரம் மத்திய கூட்டுறவு வங்கிக்கு ரூ.10 கோடி வரை பணம் அனுப்ப உள்ளோம்’’ என்றார்.

கூட்டுறவு வங்கிகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘பணம் இல்லாததால் கூட்டுறவு வங்கிக ளை மூடி வைத்துள்ளோம். இத னால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மழைக் காலத்துக்கு முன்பாக விவசாயப் பணிகளை அவர்கள் தொடங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள் ளது. எனவே, கூட்டுறவு வங்கிகளி லும் பழைய ரூபாய் நோட்டுகளை கொடுத்து புதிய நோட்டுகளை மாற்றிக்கொள்ளும் வசதியை அனுமதிப்பதுடன் சேவைகளைத் தடையின்றி செய்யவும் அனுமதிக்க வேண்டும்’’ என்றார்.

மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், ‘‘கூட் டுறவு வங்கிகளில் அரசியல்வாதி கள்தான் தலைவர் பதவிகளில் உள்ளனர். அந்த வங்கிகளுக்கு அதிகப்படியான புதிய ரூபாய் நோட்டுகளை அனுப்பி வைத்தால், கறுப்புப் பணம் எளிதாக மாறுவ தற்கு வாய்ப்பாகிவிடும்’’ என்றார்.

இதை திட்டவட்டமாக மறுத்த கூட்டுறவு வங்கி வழக்கறிஞர், ‘‘அப்படி ஒரு சூழல் கூட்டுறவு வங்கிகளில் இல்லை. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்’’ என்றார்.

அனைத்து தரப்பு வாதங்களை யும் கேட்ட நீதிபதி என்.கிருபாகரன், ‘‘புதிய 500 ரூபாய் நோட்டு சரளமாக பொதுமக்களுக்குக் கிடைத்தால் எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைத்துவிடும்’’ என கருத்து தெரிவித்தார். மேலும் ரூ.500 புதிய நோட்டு தமிழகத்தில் எப்போது புழக்கத்துக்கு வரும், கூட்டுறவு வங்கிளுக்கு எப்போது புதிய ரூபாய் நோட்டுகள் அனுப்பி வைக்கப்படும் என்பது குறித்து வெள்ளிக்கிழமை (நவ.18) ரிசர்வ் வங்கி பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in