Published : 07 Oct 2022 05:30 PM
Last Updated : 07 Oct 2022 05:30 PM

இந்து சமய அறநிலையத் துறையை சைவம், வைணவம் என இரண்டாக பிரிக்க வேண்டும்: திருமாவளவன் 

மதுரையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன்

சென்னை: இந்து சமய அறநிலையத் துறையை சைவம், வைணவம் என்று இரண்டாக பிரிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மதுரை மாமன்ற உறுப்பினர் தெற்கு மாவட்ட செயலாளர் இன்குலாப் இல்லத் திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினேன். அப்போது அரசுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தேன். இந்து சமய அறநிலையத் துறையை சைவ சமய அறநிலையத் துறை என்றும், வைணவ சமய அறநிலையத் துறை என்றும் பிரித்திட வேண்டும் என உரையாற்றினேன்.

இவ்விரு சமயங்களையும் இந்து சமயம் என்று ஆக்கியதன் மூலம் அவற்றின் அடிப்படைக் கோட்பாடுகள் நீர்த்துப்போகின்றன. அதாவது, சிவனியம், மாலியம் ஆகியவற்றை வைதிக மத கோட்பாடான சனாதனம் விழுங்கிவிட்டு மேலாதிக்கம் செய்கிறது" என்று அந்தப் பதிவில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x