கூட்டுறவு அங்காடிகளில் சிறிய காஸ் சிலிண்டர் விற்பனை - அமைச்சர் தொடங்கிவைத்தார்

கூட்டுறவு அங்காடிகளில் சிறிய காஸ் சிலிண்டர் விற்பனை - அமைச்சர் தொடங்கிவைத்தார்
Updated on
1 min read

சென்னை: இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 2 மற்றும் 5 கிலோ எடையிலான சமையல் காஸ் சிலிண்டர்கள், கூட்டுறவு சிறப்பங்காடிகள், பெட்ரோல் நிலையங்களில் விற்பனை செய்யப்பட உள்ளன. சென்னை திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தில், கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி நேற்று இத்திட்டத்தை தொடங்கிவைத்தார்.

சிறிய அளவிலான சமையல் காஸ் சிலிண்டர்கள், இடம்பெயரும் தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள், சிறு வணிகர்கள், மீனவர்கள், சுற்றுலா செல்வோருக்குப் பயனுள்ளதாக இருக்கும். இவற்றைப் பெற எவ்வித முகவரிச் சான்றும் தேவையில்லை. ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை மட்டும் சமர்ப்பித்து, அவற்றைப் பெற்றுக் கொள்ளமுடியும்.

இதில், 2 கிலோ சிலிண்டரின் புதிய இணைப்புக்கு ரூ.961.50, எரிவாயு நிரப்ப ரூ.263.50, ஐந்து கிலோ சிலிண்டர் புதிய இணைப்புக்கு ரூ.1,528, எரிவாயு நிரப்ப ரூ.584 என இந்தியன் ஆயில் நிறுவனத்தால் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in