

மின்வாரிய ஊழியர், மனைவி மற்றும் மகளை கொலை செய்தது அவரது மகன்தான் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த காக்கங்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் மின்வாரிய ஊழியர் மோகன்(55). இவரது மனைவி ராஜேஸ்வரி(48), மகள் சுகன்யா(23). இவர்கள் 3 பேரும் வீட்டில் நேற்று முன்தினம் அதி காலை மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டனர். மகன் தமிழரசனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. காயமடைந்த தமிழர சன் திருப்பத்தூர் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.
மோகன் வீடு உள்பக்கம் பூட்டப் பட்டிருந்தது. வெளியாட்கள் யாரும் உள்ளே வர வாய்ப்பு இல்லை என்பதால், 3 பேரின் கொலைக்கும், தமிழரசனுக்கும் தொடர்பு இருக்கும் என சந்தேகித் தோம்.
தமிழரசன் ஒசூரில் வேலை செய்த இடத்தில் தன்னுடன் வேலை செய்த அதே பகுதி யைச் சேர்ந்த பெண்ணை காதலித் துள்ளார். இதுகுறித்து தன் தாய் ராஜேஸ்வரியிடம் கூறியபோது, தங்கை திருமணம் முடிந்த பிறகு பேசிக்கொள்ளலாம் என்று கூறி யுள்ளார். கடந்த மாதம் சென் னையைச் சேர்ந்த மாப்பிள்ளை வீட்டார், மோகன் வீட்டுக்கு வந்து சுகன்யாவை பெண் பார்த்துவிட்டு, ஜனவரியில் திருமணம் வைத் துக்கொள்ளலாம் என்று கூறி நிச்சயம் செய்துள்ளனர்.
இந்நிலையில், தங்கையின் திருமணம் முடிந்த பிறகு தனது திருமணத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என கடந்த சனிக் கிழமை இரவு தமிழரசன் தன் பெற்றோரிடம் கூறியுள்ளார். அவர் காதலிக்கும் பெண் வேறு ஜாதியைச் சேர்ந்தவர் என்பதால், திருமணத்துக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பின்னர், மோகன் இரவுப் பணிக்கு சென்றுள்ளார். தாய் மற்றும் தங்கையிடம் தனது திருமணம் குறித்து தமிழரசன் மீண்டும் பேசியுள்ளார். அதில் எந்த முன் னேற்றமும் இல்லாததால், தாய் மற்றும் தங்கையை கத்தியால் வெட்டிக் கொலை செய்துள்ளார்.
இரவுப் பணி முடிந்து அதிகாலை 4.30 மணிக்கு வீட்டுக்கு வந்த மோகன், மனைவி மற்றும் மகள் சடலமாகக் கிடப்பதைப் பார்த்து கதறி அழுதுள்ளார். உடனே, கீழே கிடந்த கத்தியை எடுத்து மகனை அவர் குத்தச் சென்றுள்ளார். அப்போது தமிழரசனின் இடது மார்ப்பில் கத்திக்குத்து விழுந்துள்ளது. உடனே, தமிழரசன் அதே கத்தியைப் பறித்து தந்தையை வெட்டிக் கொலை செய்துள்ளார் என்று போலீஸார் தெரிவித்தனர்.