Published : 07 Oct 2022 04:30 AM
Last Updated : 07 Oct 2022 04:30 AM

தீபாவளி கூட்ட நெரிசலை தவிர்க்க பெங்களூரு - நெல்லை, மைசூர் - தூத்துக்குடி சிறப்பு ரயில்கள்

மதுரை

தீபாவளி பண்டிகை கூட்ட நெரிசலைத் தவிர்க்க பெங்களூரு அருகில் உள்ள யெஸ் வந்த்பூர்-திருநெல்வேலி, மைசூர்-தூத்துக்குடி இடையே சிறப்பு கட்டண ரயில்களை இயக்க தென்மேற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி யெஸ்வந்த்பூர்-திருநெல்வேலி சிறப்பு ரயில் (06565) அக்டோபர் 18 மற்றும் 25 ஆகிய செவ்வாய்க்கிழமைகளில் யெஸ்வந்த்பூரில் இருந்து பிற்பகல் 12.45 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு திருநெல்வேலி வந்தடையும்.

திருநெல்வேலியில் இருந்து சிறப்பு ரயில் (06566) அக்டோபர் 19 மற்றும் 26 ஆகிய புதன்கிழமைகளில் காலை 10.40 மணிக்கு புறப்பட்டு இரவு 11.30 மணிக்கு யெஸ்வந்த்பூர் சென்றடையும்.

இந்த ரயில்கள் பனஸ்வாடி, கார்மேலரம், ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

மைசூர்-தூத்துக்குடி: மைசூர்-தூத்துக்குடி சிறப்பு கட்டண ரயில் (06253) அக்டோபர் 21 அன்று மைசூரில் இருந்து பிற்பகல் 12.05 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5 மணிக்கு தூத்துக்குடி வந்து சேரும்.

தூத்துக்குடி-மைசூர் சிறப்பு கட்டண ரயில் (06254) அக்டோபர் 22 அன்று மாலை 3 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு மைசூர் சென்று சேரும்.

இந்த ரயில்கள் யெலியூர், மாண்டியா, பெங்களூர், பெங்களூர் கண்டோன்மென்ட், ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இத்தகவலை மதுரை ரயில் வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x