

தென் தமிழகத்தில் இன்று அனேக இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது:
தமிழகத்தில் தெற்கு மற்றும் கேரளாவையொட்டியுள்ள பகுதி களில் வளி மண்டலத்தில் இருந்த மேலடுக்கு சுழற்சி இப்போது தென்கிழக்கு அரபிக் கடலுக்கு போய்விட்டது. இதன் காரணமாக கேரளாவிலும், தமிழ கத்தின் தென்பகுதிகளான ராமநாத புரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும் அனேக இடங்களில் மழை பெய்யும்.
பொதுவாக தென் தமிழகத்தில் அனேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.