

திருவாரூர்: கூத்தனூர் சரஸ்வதி கோயிலில் விஜயதசமி விழா நேற்று கோலா13:45 06-10-20226க்கலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தங்கள் குழந்தைகளை கோயிலுக்கு அழைத்து வந்திருந்த பெற்றோர், நெல்மணிகளை பரப்பி அதில் குழந்தைகளை எழுத வைத்து வித்யாரம்பம் செய்து வழிபாடு நடத்தினர். திருவாரூர் மாவட்டம் கூத்தனூரில் பிரசித்தி பெற்ற சரஸ்வதி அம்மன் கோயில் உள்ளது. இந்த தலம் ஒட்டக்கூத்தரால் பாடல் பெற்ற தலமாகும். இந்தக் கோயிலில் நவராத்திரி விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டில், நவராத்திரி விழா தொடங்கியது முதல் நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சரஸ்வதி அம்மன் வீதியுலா நடைபெற்றது. தொடர்ந்து, கோயிலில் நேற்று முன்தினம் சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட்டது. இதையொட்டி. வெண்பட்டாடை அணிந்து, பக்தர்களுக்கு சரஸ்வதி அம்மன் அருள்பாலித்தார். தொடர்ந்து பாத தரிசன நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையடுத்து, விஜயதசமி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கோயிலில் சரஸ்வதி அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்டன. விஜயதசமியையொட்டி, தங்களது குழந்தைகளுடன் கோயிலுக்கு வந்த ஏராளமான பெற்றோர்கள், சரஸ்வதி அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபாடு நடத்திய பின்னர், நெல்மணிகளை பரப்பி அதில் தங்களது குழந்தைகளை எழுதவைத்து, வித்யாரம்பம் செய்து, கல்வி கற்பதை தொடங்கி வைத்தனர். இதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் கோயிலுக்கு வந்திருந்து அம்மனை வழிபட்டனர். ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.