Published : 06 Oct 2022 07:03 AM
Last Updated : 06 Oct 2022 07:03 AM
சென்னை: டெல்லி அருகே ஹாசன்பூரில் எம்.ஆர். கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. கால்நடை மருத்துவமனையுடன் அமைந்துள்ள இக்கல்லூரியில் இந்த கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் அதிக அளவில் சேர்ந்துள்ளனர்.
இக்கல்லூரியில் ஐந்தரை ஆண்டு பி.வி.எஸ்.சி. மற்றும் ஏ.ஹெச். என்னும் கால்நடை மருத்துவப் படிப்புக்கு நாடு முழுவதுமிருந்தும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் சேர்ந்துள்ளனர். இந்த கல்வியாண்டில் தமிழகத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் சேர்ந்துள்ளனர். இப்படிப்பில் சேர 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று நீட் தேர்வு எழுதி இருந்தாலே போதும். நீட் தேர்ச்சி தேவையில்லை. இங்கு கால்நடை மருத்துவம் படித்தால் அரசு கால்நடை மருத்துவர், அரசு சாரா நிறுவனங்களில் கால்நடை மருத்துவர், விலங்கு ஆராய்ச்சி விஞ்ஞானி, கால்நடை வளர்ச்சி அலுவலர், விலங்கு பராமரிப்பு நிபுணர் ஆகிய அரசு வேலைகளில் சேரலாம் என்பதால் மாணவர்களிடையே இந்த படிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இக்கல்லூரியில் ஆண்-பெண் இருபாலருக்கும் தனித்தனி குளிர்சாதன விடுதி வசதியோடு, தென்னிந்திய உணவு வகைகளும் வழங்கப்படுகிறது. 20 ஏக்கர் பரப்பளவு கொண்ட மிகப் பெரிய வளாகம், ஹைடெக் மாட்டுப்பண்ணை மற்றும் முயல் பண்ணைகள், சிறந்த ஆய்வுக்கூடங்கள் ஆகியன சிறப்பு அம்சங்களாக உள்ளன. இக்கல்லூரியில் சேர விரும்பும் தமிழகத்தைச் சார்ந்த மாணவ-மாணவிகள் சென்னை, தருமபுரி, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வரும் எம்.ஆர். கால்நடை மருத்துவக் கல்லூரி சேர்க்கை மையத்தில் தொடர்புகொள்ளவும். கூடுதல் விவரங்களுக்கு 96267 21411 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT