

சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் - கோவை இடையே வரும் 8-ம் தேதி முதல் நவம்பர் 5-ம் தேதி வரை வாராந்திர சிறப்பு ரயில் (எண்:05303) இயக்கப்படும்.
இந்த ரயில் சனிக்கிழமைதோறும் காலை 8.30 மணிக்கு கோரக்பூரிலிருந்து புறப்பட்டு, திங்கட்கிழமை காலை 7.25 மணிக்கு கோவை வந்தடையும். இதேபோல, கோவை-கோரக்பூர் இடையே வரும் 11-ம் தேதி முதல் நவம்பர் 8-ம் தேதி வரை சிறப்பு ரயில் (எண்:05304) இயக்கப்படும்.
இந்த ரயில் செவ்வாய்கிழமைதோறும் அதிகாலை 4.40 மணிக்கு கோவையிலிருந்து புறப்பட்டு, வியாழக்கிழமை காலை 8.35 மணிக்கு கோரக்பூர் சென்றடையும்.
இந்த ரயில்கள், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர், குண்டூர், நெல்லூர், ஓங்கோல், தெனாலி, விஜயவாடா, வாரங்கல் உள்ளிட்ட ரயில்நிலையங்களில் நின்று செல்லும்.