Published : 06 Oct 2022 07:51 AM
Last Updated : 06 Oct 2022 07:51 AM

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்று கடைசி

சென்னை

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2022-23-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது கடந்த செப்டம்பர் 12-ம் தேதி தொடங்கியது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் விண்ணப்பித்து வருகின்றனர்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பது அக்டோபர் 3-ம் தேதி மாலை 5 மணியுடன் நிறைவடைய இருந்த நிலையில் மாணவர்களின் வேண்டுகோளை ஏற்று விண்ணப்பிக்கும் கால அவகாசம் அக்டோபர் 6-ம் தேதி மாலை 5 மணி நீட்டிக்கப்பட்டது. அதன்படி, இன்று மாலை 5 மணியுடன் ஆன்லைனில் விண்ணப்பிப்பது முடிவடைகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x