

சென்னை: மின்சார ரயிலில் கற்பூரம் ஏற்றி ஆயுதபூஜை கொண்டாடியது தொடர்பாக விசாரணை நடத்த ரயில்வே பாதுகாப்பு படைக்கு சென்னை ரயில்வே கோட்டம் உத்தரவிட்டுள்ளது. பயணிகள் பாதுகாப்புக்கு இடையூறு செய்யும் வகையில், நடப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் மின்சார ரயில்களில் தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் பயணிக்கின்றனர். செங்கல்பட்டில் இருந்து சென்னைக்கு வரக்கூடிய குறிப்பிட்டஒரு ரயிலின் குறிப்பிட்ட பெட்டியில் பயணிகள் சிலர் நேற்று முன்தினம் ஆயுதபூஜை கொண்டாடினர். ரயில் பெட்டிக்குள்ளேயே வண்ணக் கலர் பேப்பர்களை தோரணமாக கட்டி, சாமி படம் வைத்து, கற்பூரம் ஏற்றி வணங்கினர். சக பயணிகளுக்கு சுண்டல், பொங்கல் உள்ளிட்ட பிரசாதத்தை வழங்கினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இதைத் தொடர்ந்து, இதுகுறித்து விசாரணை நடத்த ரயில்வே பாதுகாப்புப் படைக்கு சென்னை கோட்ட மேலாளர் உத்தரவிட்டுள்ளார். ரயில்களில் எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை. அதுபோல, கற்பூரம் ஏற்றுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், மின்சார ரயிலில் கற்பூரம் ஏற்றி ஆயுதபூஜை கொண்டாடியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, ஆயுதபூஜை கொண்டாடியது தொடர்பாக விசாரணை நடத்த போலீஸாருக்குசென்னை ரயில்வே கோட்டம் உத்தரவிட்டுள்ளது,