மக்கள் நலப் பணியாளர் பணியில் சேர அக்.12-ம் தேதி வரை கால அவகாசம்

ராமநாதபுரம் ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் | கோப்புப் படம்
ராமநாதபுரம் ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் | கோப்புப் படம்
Updated on
1 min read

விருப்ப விண்ணப்பம் சமர்பிக்காத மக்கள் நலப்பணி யாளர்கள் பணியில் சேர அக்.12 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் விடுத்துள்ள அறிக்கை:

ஊரக வளர்ச்சித் துறையில் 8.11.2011 அன்று பணியிழந்த முன்னாள் மக்கள் நலப்பணியாளர்கள் மற்றும் இறந்த அவர்களின் வாரிசுதாரர்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை உறுதித் திட்டப் பணி ஒருங்கிணைப்பாளர்களாக பணிபுரிய, கடந்த 13.6.2022 முதல் 18.6.2022 வரை விருப்ப விண்ணப்பங்கள் பெறப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி விருப்ப விண்ணப்பங்கள் அளித்து பணியில் சேராத முன்னாள் மக்கள் நலப் பணியாளர்கள் மற்றும் அவர்களது வாரிசுதார்களுக்கு வரும் 12-ம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்படுகிறது.

எனவே, பணியிழந்து இதுவரை விண்ணப்பம் சமர்ப்பிக்காத தகுதியானவர்கள் மற்றும் அவர்களது வாரிசுதாரர்கள் சம்பந்தப்பட்ட பிடிஓவை (கிராம ஊராட்சி ) தொடர்பு கொண்டு பணியில் சேரலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in