

தஞ்சாவூர் உள்ளிட்ட 3 தொகுதி களுக்கும் பொதுப் பார்வை யாளர்கள் நாளை (2-ம் தேதி) வருகின்றனர். அவர்கள் முன்னி லையில், 3-ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை நடக்கும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.
தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் சட்டப் பேரவை தொகுதிகளுக்கு வரும் 19-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நடந்து வருகிறது. இந்நிலையில், தேர்தல் பணிகள் குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களைக் கண்காணிக்க செலவின பார்வையாளர்கள் 3 பேர், அந்தந்த தொகுதிகளுக்கு வந்து பணிகளைத் தொடங்கிவிட்டனர். பொதுப் பார்வையாளர்கள் 2-ம் தேதி வருகின்றனர். அவர்கள் முன்னிலையில் 3 தொகுதிகளிலும் வேட்பு மனுக்கள் 3-ம் தேதி பரிசீலிக்கப்படும். அடுத்த இரு தினங்களில் காவல்துறை பார்வையாளர்கள் தொகுதிக்கு ஒருவர் என 3 பேர் வந்து பணிகளைத் தொடங்குவர்.
வேட்புமனு தாக்கல், பரிசீலனை, மனுக்கள் வாபஸ் முடிந்து இறுதி வேட்பாளர் பட்டியல் நவம்பர் 5-ம் தேதி வெளியிடப்படும். அதன் பிறகு, தபால் வாக்குச்சீட்டுகள் அச்சடிக்கும் பணி தொடங்கும். இப்பணிகள் முடிந்ததும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர், சின்னம், புகைப் படம் அடங்கிய சீட்டுகள் பொருத் தும் பணி 7-ம் தேதி தொடங்கும்.
மூன்று தொகுதிகளிலும் தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள 4 ஆயிரம் அலுவலர்களுக்கு 3 கட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது. முதல்கட்டமாக 1-ம் தேதி (இன்று) தேர்தல் அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. அவர் கள், மற்றவர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள்.
வாக்காளர் பட்டியலில் திருத்தம் தொடர்பாக ஆன்லைனிலும், சம்பந்தப்பட்ட அலுவலகங்களிலும் மனுக்கள் கொடுக்கலாம்.
தேர்தல் பணிகளில் ஈடுபடும் வாக்குச்சாவடி தலைமை அலுவலர், குறிப்பிட்ட படிவங்களைப் பூர்த்தி செய்து வழங்க வேண்டும். இதை பூர்த்தி செய்வதில் பல குழப்பங்கள் ஏற்பட்டு வந்தன.
எனவே, அடுத்து வரும் தேர்தல் களில் இப்படிவத்தில் கேட்கப்படும் தகவல்களை எளிமைப்படுத்தும் முயற்சியில் தேர்தல் ஆணை யம் தற்போது ஈடுபட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரி வித்தார்.