

சத்தியமங்கலம் அடுத்த மூலக்கடம் பூர் என்ற இடத்தில் மின்வேலியில் சிக்கி 15 வயது ஆண் யானை உயிரிழந்தது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்க லம் அடுத்துள்ள கடம்பூர் மலைப் பகுதி மூலக்கடம்பூர் கொட்டாற்று பள்ளம் என்ற இடத்தில் தங்கவேலு என்பவரது தோட்டம் உள்ளது. வனத்தையொட்டி உள்ள இவரது தோட்டத்தில் வனவிலங்குகள் புகுந்து விவசாயப் பயிர்களை சேதப்படுத்தி வந்தன. இதனால், தோட்டத்தைச் சுற்றி மின் வேலி அமைத்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன் தினம் தோட்டத்துக்கு வந்த 15 வயதுள்ள ஆண் யானை, மின்வேலியில் சிக்கி மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதுகுறித்து வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
யானை இறந்த தகவல் கேட்டு கிராம மக்கள் அப்பகுதியில் குவிந்தனர். தோட்டத்தின் உரிமை யாளர் தங்கவேலுவிடம் வனத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் குறித்து கடம்பூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.