50, 100 ரூபாய் தட்டுப்பாட்டால் மக்கள் அவதி: புதிய ரூ.500 வந்தால்தான் பிரச்சினை தீரும் - வங்கி அதிகாரி தகவல்

50, 100 ரூபாய் தட்டுப்பாட்டால் மக்கள் அவதி: புதிய ரூ.500 வந்தால்தான் பிரச்சினை தீரும் - வங்கி அதிகாரி தகவல்
Updated on
2 min read

வங்கிகளில் 50, 100 ரூபாய் நோட்டு களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள தால் மக்கள் கடும் அவதிப்படு கின்றனர். 100 ரூபாய் நோட்டுகளை அதிகமாக வழங்குவதுடன் புதிய 500 ரூபாய் நோட்டுகளை விரைவில் புழக்கத்துக்கு விட்டால்தான் இந்தப் பிரச்சினை முடிவுக்கு வரும் என்று வங்கி உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

நாடு முழுவதும் செல்லாது என அறிவிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள் வதற்காக கடந்த 3 நாட்களாக வங்கிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. சென்னை உட்பட தமிழகம் முழுவதும் இதே நிலை தான் காணப்பட்டது. 2 நாட்களுக்குப் பிறகு ஏடிஎம் மையங்கள் நேற்று முன்தினம் திறக்கப்பட்டன.

ஆனால், பெரும்பாலான ஏடிஎம் மையங்கள் செயல்படவில்லை. சில ஏடிஎம் களில் வைக்கப்பட்ட பணமும் சில மணி நேரத்தில் காலியானது. இதனால் பொது மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாயினர்.

சென்னையில் நேற்றும் பெரும் பாலான ஏடிஎம் மையங்கள் திறக் கப்படாததால் மக்கள் ஏமாற்ற மடைந்தனர். திறந்திருந்த ஒரு சில ஏடிஎம்-களிலும் மக்கள் அதிகாலையில் இருந்தே நீண்ட வரிசையில் காத்திருந்தனர். 50, 100 ரூபாய் நோட்டுகள் தட்டுப்பாடே ஏடிஎம் மூடப்பட்டிருப் பதற்கு காரணம் என்று கூறப்படுகிறது

மக்கள் சிரமத்தை போக்க..

வங்கிகளில் இதுவரை புதிய 500 ரூபாய் நோட்டுகள் வழங்கப்பட வில்லை. பழைய நோட்டுகளை வாங்கிக் கொண்டு புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வழங்கப்படு கின்றன. அந்த நோட்டுகளை கடை களில் கொடுத்து மாற்ற முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். சிறிய, பெரிய கடைகள், திரையரங்குகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் என எல்லா இடத்திலும் 100 ரூபாய் நோட்டுகள் தட்டுப்பாடாக இருக்கிறது. இந்த தட்டுப்பாட்டைப் போக்கி மக்களின் சிரமத்தைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசர அவசியமானதாக உள்ளது.

இதுதொடர்பாக இந்தியன் வங்கி உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ஏடிஎம்-களில் வைக்கத் தேவை யான அளவு 100 ரூபாய் நோட்டுகள் இல்லை. முதல்நாளில் ஒவ்வொரு ஏடிஎம்-மிலும் வைக்கப் பட்ட ரூ.2.50 லட்சமும் 2 மணி நேரத்திலேயே தீர்ந்துவிட்டது. வங்கிக் கவுன்ட்டர்களில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மட்டுமே கொடுக்கிறோம். ஏடிஎம்-களில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வைக்கச் சொல்லி ரிசர்வ் வங்கியில் இருந்து எங்களுக்கு எந்த உத்தரவும் இதுவரை வரவில்லை.

ஏடிஎம்-களில் 100, 50 ரூபாய் நோட்டுகள் வைக்கச் சொன்னார் கள். ஆனால், 100 ரூபாய் நோட்டுகள் மட்டுமே இருப்பு உள்ளதால் அவற்றை வைக்கின்றோம். சென்னையில் உள்ள இந்தியன் வங்கிக் கிளைகளுக்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வந்துள்ளன. அதை விநியோகித்து வருகிறோம். ஆனால், கிராமப்புறங்களில் உள்ள வங்கிக் கிளைகளுக்கு இன்னமும் புதிய ரூபாய் நோட்டுகள் அனுப்பப்படவில்லை.

சென்னையில் ரிசர்வ் வங்கி மண்டல அலுவலகம் இருப்பதா லும், இந்தியன் வங்கிக்கான கருவூலம் இருப்பதாலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் தட்டுப்பாடு இல்லாமல் விநியோகிக்கப் படுகின்றன.

தீர்வு எப்போது?

50 ரூபாய் நோட்டுகள் கையிருப் பிலும் இல்லை. இது எங்களுக்கும் பெரிய பிரச்சினையாகத்தான் உள்ளது. வங்கிக் கவுன்ட்டர்களில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை கொடுத்தால், மீண்டும் வங்கிக்கே வந்து சில்லறை கேட்கின்றனர். 100 ரூபாய் நோட்டுகள் அதிக எண்ணிக்கையில் விநியோகிப்ப துடன், விரைவில் புதிய 500 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்டால்தான் இப்பிரச்சினை முடிவுக்கு வரும். அவை எப்போது புழக்கத்துக்கு வரும் என்ற தகவல் எதுவும் இல்லாததால் எத்தனை நாளில் இப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.

இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in