'தமிழகத்தில் மாநகராட்சி முதல்  ஒன்றியங்கள் வரை வளர்ச்சிப் பணிகள் முடங்கிக் கிடக்கிறது' - இபிஎஸ்

எடப்பாடி பழனிசாமி | கோப்புப்படம்
எடப்பாடி பழனிசாமி | கோப்புப்படம்
Updated on
1 min read

சேலம்: "கோவையில் சுமார் ரூ.48 கோடியில், 133 பணிகளுக்கு, ஒப்பந்தங்கள் கோரப்பட்டு கிட்டத்தட்ட 11 முறை தள்ளிவைத்துள்ளனர். அதற்கு காரணம் கமிசன் அதிகமாக கேட்பதால், பணிகளை எடுக்க யாரும் முன்வரவில்லை. அதேபோல், தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியம், கிராமங்கள் வரை வளர்ச்சிப் பணிகள் எல்லாம் முடங்கிக் கிடக்கிறது" என்று அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

சேலத்தில் அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், மழைக்காலம் தொடங்கியுள்ள சூழலில், தமிழக அரசின் பணிகள் எவ்வாறு இருக்கிறது என்று கேள்வி எழுப்பப்டட்து. அதற்கு பதிலளித்த அவர், "இந்த ஆட்சி அமைந்ததில் இருந்து தற்போது வரை மெத்தனப்போக்குடன்தான் செயல்பட்டு வருகிறது என்பது அனைவருக்குமே தெரியும். அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட பணிகளைத்தான் இன்றைக்கு ஆட்சியாளர்கள் திறந்து வைத்துக் கொண்டுள்ளனர். திமுக அரசு அமைந்தபிறகு, ஏதாவது ஒரு பெரிய திட்டத்தை அறிவித்து, அதற்கான பணிகள் நடைபெறுகிறது என்றால் அப்படி எதுவும் இல்லை.

அதிமுக ஆட்சிக்காலத்தில், 11 மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் பணிகள் முடிக்கப்பட்டது, அதை திறந்து வைக்கிறார்கள். அதேபோல், சட்டக்கல்லூரி பணிகள் முடிக்கப்பட்டது அதை திறந்து வைக்கிறார்கள். இதுபோல இன்னும் பல்வேறு பணிகள் அதிமுக ஆட்சியில் முடிவுற்ற பணிகளை எல்லாம் திறந்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

கோவையில் சுமார் 48 கோடியில், 133 பணிகளுக்கு, ஒப்பந்தங்கள் கோரப்பட்டு கிட்டத்தட்ட 11 முறை தள்ளிவைத்துள்ளனர். அதற்கு காரணம் கமிசன் அதிகமாக கேட்பதால், பணிகளை எடுக்க யாரும் முன்வரவில்லை. அதேபோல், தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியம், கிராமங்கள் வரை வளர்ச்சிப் பணிகள் எல்லாம் முடங்கி கிடக்கிறது.

அதேபோல், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றும் வரும் அரசு 2021 தேர்தலின்போது கொடுத்த முக்கியமான வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. மக்கள் கொதித்துப்போயுள்ளனர்" என்று அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in