Published : 04 Oct 2022 01:00 PM
Last Updated : 04 Oct 2022 01:00 PM

மருத்துவ படிப்புகளுக்கு அக்.11ம் தேதி முதல் கலந்தாய்வு

கோப்புப் படம் | மருத்துவ கலந்தாய்வு

சென்னை: மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு அக்.11ம் தேதி முதல் தொடங்குகிறது.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 4,328 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இதில் அரசுக் கல்லூரிகளுக்கு ரூ.13,610, இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிக்கு 1 லட்சம் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2 அரசு பல் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில் மொத்தம் 170 இடங்கள் உள்ளன. இதில் சேரும் மாணவர்களுக்கு ரூ.11,610 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த 22ம் தேதி தொடங்கியது. மாணவர்கள் https://ugreg22.tnmedicalonline.co.in/mbbs22/ என்ற இணையதளம் மூலம் அக்.3-ம் தேதி வரை தங்களின் விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு 6-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பங்களை சமர்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மருத்துவ கலந்தாய்வு தேதியை மருத்துவக் கலந்தாய்வு கமிட்டி அறிவித்துள்ளது. இதன்படி அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு அக்டோபர் 11 முதல் கலந்தாய்வு நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு அக்டோபர் 17-ம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் 17 முதல் 28ம் தேதிக்குள் முதற்கட்ட கலந்தாய்வை மாநிலங்கள் நிறைவு செய்ய வேண்டும் என்றும், முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கான வகுப்புகள் நவம்பர் 15ம் தேதி தொடங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுளளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x