தேவரியம்பாக்கம் காஸ் கிடங்கு விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்வு

தேவரியம்பாக்கம் காஸ் கிடங்கு விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்வு
Updated on
1 min read

காஞ்சிபுரம்: காஞ்சி மாவட்டம் வாலாஜாபாத்தை அடுத்துள்ள தேவரியம்பாக்கம் பகுதியில் உள்ள காஸ் கிடங்கில் பெரிய சிலிண்டர் ஒன்றை இறக்கும்போது அதில் இருந்து காஸ் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது. இதில் காஸ் சிலிண்டர்கள் வெடித்ததில் 12 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர். இவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த ஆமோத்குமார், தேவரியம்பாக்கத்தைச் சேர்ந்த காஸ் கிடங்கு உரிமையாளர் ஜீவானந்தம், சந்தியா உட்பட 4 பேர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டனர். மீதமுள்ள 8 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தச் சூழ்நிலையில் சிகிச்சை பலனில்லாமல் குடவாசல் குணால் (22), தேவரியம்பாக்கம் பூஜா(21), சண்முகப்பிரியன்(17) ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கெனவே இந்த காஸ் கிடங்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in