பாபநாசம், சேர்வலார், மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு

பாபநாசம், சேர்வலார், மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு
Updated on
1 min read

பாபநாசம், சேர்வலார், மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களிலிருந்து கார் பருவ சாகுபடிக்காக நாளை முதல் தண்ணீர் திறந்துவிட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்: "திருநெல்வேலி மாவட்டம், தாமிரபரணி பாசன் அமைப்பின் நேரடி மற்றும் மறைமுக பாசன்ப் பகுதிகளுக்கு கார் பருவ சாகுபடிக்காக பாபநாசம், சேர்வலார் மற்றும் மணிமுத்தாறு நீர்தேக்கங்களிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுமாறு திருநெல்வேலி மாவட்ட விவசாயப் பெருமக்களிடமிருந்து கோரிக்கை வந்தது.

விவசாயிகள் கோரிக்கையை ஏற்று பாபநாசம், சேர்வலார், மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களிலிருந்து கார் பருவ சாகுபடிக்காக நாளை முதல் தண்ணீர் திறந்துவிட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனால், திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் மற்றும் திருநெல்வேலி வட்டங்களிலுள்ள 18,090 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்" இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in