முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ
முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ

முதல்வரின் உத்தரவை மீறி மேயர், மண்டல தலைவரின் கணவர்கள் ஆய்வு: செல்லூர் கே.ராஜூ குற்றச்சாட்டு

Published on

முதல்வரின் உத்தரவை மீறி மதுரையில் மேயரின் கணவர், மத்திய மண்டலத் தலைவரின் கணவர் ஆய்வு செய்ததாக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ குற்றம் சாட்டினார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதற்காகத்தான் அவர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதன்படியே மதுரை மேயராக இந்திராணி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல் மத்திய மண்டல தலைவராக பாண்டிச்செல்வி உள்ளார்.

மதுரை மாநகராட்சி 76-வது வார்டில் பாதாள சாக்கடை, சுகாதாரப் பணிகள் தொடர்பான ஆய்வு நேற்று நடந்தது. இதில் மேயர், மண்டலத் தலைவர் பங்கேற்கவில்லை.

ஆனால் மேயரின் கணவர் பொன்.வசந்த். மத்திய மண்டலத் தலைவரின் கணவர் மிசா பாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர். அவர்களுடன் மாநகராட்சி உதவி ஆணையர் உள்ளிட்ட அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.

பொதுமக்கள் பலர் முன்னிலையில் பதவியில் உள்ளவருக்குப் பதிலாக கணவரே இவ்வாறு நடந்து கொள்வது நியாயமா?. இதை அதிமுக சார்பில் கண்டிக்கிறோம்.

உள்ளாட்சி அமைப்புகளில் உறவினர்கள் தலையீடு இருக் கக் கூடாது என முதல்வர் உத்தர விட்டுள்ளார். இதை மதுரை மேயரின் கணவர் அப்பட்டமாக மீறி உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in