ராணுவத்திடம் பிடிபட்ட ஆம்பூர் இளைஞருக்கு தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பா? - போலீஸார் தீவிர விசாரணை

ராணுவத்திடம் பிடிபட்ட ஆம்பூர் இளைஞருக்கு தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பா? - போலீஸார் தீவிர விசாரணை
Updated on
1 min read

ஜம்மு காஷ்மீர் ராணுவ முகாம் அருகே பிடிபட்ட ஆம்பூர் இளை ஞருக்குத் தீவிரவாத இயக்கங் களுடன் ஏதேனும் தொடர்பு உள்ளதா? என போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:

மத்தியப் பிரதேச மாநிலம், போபால் சிறையில் அடைக்கப் பட்டிருந்த 8 சிமி தீவிரவாதிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தப்பியோடினர். இதில், 8 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் ராணுவ முகாம் அருகே நேற்று முன்தினம் சந்தேகப்படும்படி இளைஞர் ஒருவர் சுற்றித் திரிந்தார். அவரை, இந்திய ராணுவத்தினர் கைது செய்தனர். விசாரணையில் அந்த நபர், வேலூர் மாவட்டம் ஆம்பூரைச் சேர்ந்த ஜாகீர்அகமது என்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து ஜாகீர் அகமது புகைப்படத்தை ராணுவத்தினர் இ-மெயில் மூலம் ஆம்பூர் நகர காவல் நிலைய போலீஸாருக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி அறிக்கை அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.

இதுகுறித்து ஆம்பூர் டவுன் போலீஸார் நடத்திய விசாரணையில், இந்திய ராணுவத்தினரால் கைது செய் யப்பட்ட ஜாகீர்அகமது(34), ஆம்பூர் ரெட்டித் தோப்பு அனீஸ் நகரைச் சேர்ந்த நசீர்அகமது மகன் என தெரியவந்தது. உடனே, ரெட்டித் தோப்பு பகுதிக்குச் சென்ற போலீஸார் ஜாகீர்அகமது பற்றி அவரது தந்தையிடம் விசாரித்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மனநலம் பாதித்த ஜாகீர்அகமது வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாக தெரிவித்தார்.

இருப்பினும், இந்திய ராணுவத்தினரிடம் பிடிபட்ட ஜாகீர்அகமது உண்மையில் மனநலம் பாதித்தவரா? அல்லது சிமி உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுடன் அவருக்குத் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in