

சபரிமலைக்குச் செல்லும் ரயிலில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம பெண் ஒருவர் தொலை பேசியில் மிரட்டியதையடுத்து, சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் மோப்ப நாய்கள் உதவியுடன் ரயில்வே போலீஸார், ரயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை நடத்தினர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு தினமும் ஏராள மான விரைவு ரயில்கள் சென்று வருகின்றன. இவற்றில் ஆயிரக் கணக்கானோர் பயணம் செய்கின்றனர்.
இந்நிலையில், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள ரயில்வே போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலை 4.15 மணிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய பெண் ஒருவர், சபரிமலைக்குச் செல்லும் விரைவு ரயிலில் வெடி குண்டு வைத்திருப்பதாக கூறி போன் இணைப்பை உடனே துண்டித்துவிட்டார்.
இத்தகவல் உடனடியாக பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள், போலீஸார், ரயில்வே பாதுகாப்பு படையினரிடம் தெரிவிக்கப்பட்டது. மோப்ப நாய்களுடன் ரயில்வே போலீஸார், பாதுகாப்பு படை யினர் சோதனையில் ஈடுபட்டனர். திருவனந்தபுரம் மெயில், திரு வனந்தபுரம் விரைவு ரயில், ஹைதராபாத், சார்மினார், ஜிடி, மங்களூர் உள்ளிட்ட விரைவு ரயில் களில் சோதனை நடத்தப்பட்டது.
இதுமட்டுமின்றி, எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து சபரிமலைக்குச் செல்லும் ரயில், வழக்கமான விரைவு, சிறப்பு ரயில் களிலும் சோதனை நடத்தப்பட்டது. ஆனால், சோதனையில் எதுவும் சிக்கவில்லை. தொலைபேசி மிரட் டல் வெறும் புரளி எனத் தெரிய வந்தது. மிரட்டல் விடுத்த பெண் யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.