அரசு ஊழியர்களுக்கு இன்று சம்பள நாள்: பண நெருக்கடியில் பொதுத்துறை வங்கிகள் - தனியார் வங்கிகளுக்கு அதிக பணம் வழங்குவதாக குற்றச்சாட்டு

அரசு ஊழியர்களுக்கு இன்று சம்பள நாள்: பண நெருக்கடியில் பொதுத்துறை வங்கிகள் - தனியார் வங்கிகளுக்கு அதிக பணம் வழங்குவதாக குற்றச்சாட்டு
Updated on
2 min read

பணத்தட்டுப்பாடு பிரச்சினை காரணமாக சம்பள நாளான இன்று அரசு ஊழியர்களுக்கு ஊதியத்தை வழங்க முடியாமல் நெருக்கடியில் பொதுத்துறை வங்கிகள் சிக்கித் தவிக்கின்றன. இதற்கிடையே, அரசு வங்கிகளைவிட தனியார் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அதிக அளவில் புதிய ரூபாய் நோட்டுகளை வழங்குவதாக வங்கி தொழிற்சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்கில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு கடந்த 8-ம் தேதி அறிவித்தது. இதையடுத்து, பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு ஏற்ப புதிய நோட்டு களை விநியோகிக்க வங்கிகளால் முடியவில்லை. போதிய அளவு ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப் படாததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. இதனால் கடந்த 20 நாட்களுக்கு மேலாக ஏடிஎம்கள் முடங்கியுள்ளன.

வங்கி அதிகாரிகள் திணறல்

பணத்தட்டுப்பாடு பிரச்சினை யால் வங்கிகளிலும் வாடிக்கை யாளர்களுக்கு போதிய அளவு பணம் வழங்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர். குறிப்பாக 100, 500 ரூபாய் நோட்டுகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வங்கிகளிலும் இதர இடங்களிலும் பெற்ற 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் பொதுமக்கள் தவிக்கின்றனர்.

அதேசமயம், தனியார் வங்கி களில் வாடிக்கையாளர்களுக்கு போதிய அளவு பணம் வழங்கப்படுகிறது. வாடிக்கை யாளர்களுக்கு தங்களால் இயன்றவரை முழு சேவையை வழங்குவதன்மூலம், புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் முயற்சியிலும் தனியார் வங்கிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இதற்காக, மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கியில் இருந்து அதிக அளவில் சில்லறை நோட்டுகளைப் பெற்று இங்குள்ள கிளைகளில் விநியோகம் செய்வதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கெனவே சில்லறை நோட்டு கள் கிடைக்காமல் மக்கள் திண்டாடிவரும் நிலையில், இன்றுமுதல் சம்பளப் பரபரப்பும் சேர்ந்துகொள்கிறது. இன்றும் நாளையும் சம்பள நாள். அரசு ஊழியர்களின் சம்பளக் கணக்கு கள் அனைத்தும் பொதுத்துறை வங்கிகளில் உள்ளன. ஓய்வூதிய மும் பொதுத் துறை வங்கிகளில் இருந்தே வழங்கப்படுகிறது. அரசு ஊழியர்களும், ஓய்வூதியர்களும் வீட்டு வாடகை, பால், மளிகைப் பொருள், குழந்தைகள் கல்விக் கட்டணம் உள்ளிட்ட அத்தியா வசிய தேவைகளுக்கு ரொக்கப் பணத்தையே அதிகம் பயன்படுத்து கின்றனர்.

தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களும் வங்கிகள் வாயிலாகவே சம்பளம் பெறுகின் றனர். இந்நிலையில், இவர்கள் அனைவரும் இன்றும், நாளையும் வங்கிகளை முற்றுகையிடும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், அவர்களுக்கு போதிய பணம் வழங்க முடியாத நெருக்கடியில் பொதுத்துறை வங்கிகள் சிக்கியுள்ளன.

இதுகுறித்து அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப் பின் தமிழக பிரிவு தலைவரும், பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளருமான தே.தாமஸ் பிராங்கோ ராஜேந்திர தேவ் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

பண மதிப்பு நீக்க அறிவிப்பு வந்து 20 நாட்களுக்குப் பிறகு ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் தனது மவுனத்தைக் கலைத்து அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். ‘தற்போது ஏற்பட்டுள்ள பணத் தேவையை சமாளிக்க புதிய ரூபாய் நோட்டுகள் அதிக அளவில் அச்சடிக்கப்பட்டு போதிய அளவு இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. அவற்றை வங்கிகள் பெற்று பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார். அவரது அறிவிப்பு முரண்பாடாக உள்ளது.

உண்மையில் தற்போதுகூட வங்கிகளில் பண விநியோகம் சீரடையவில்லை. ரூ.500 நோட்டு கள் குறைவாகவே விநியோகிக் கப்படுவதால், வாடிக்கையாளர் களுக்கு வாரத்துக்கு ரூ.24 ஆயிரத்துக்கு பதிலாக, ரூ.4 ஆயிரம் மட்டுமே வங்கிகள் வழங்குகின்றன. அதிலும்கூட சில இடங்களில் ரூ.2000 நோட்டு வழங் கப்படுகிறது. இதனால் மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். ஏடிஎம்களிலும் உரிய நோட்டுகள் கிடைக்காததால், தினமும் வேலையை விட்டுவிட்டு வங்கிகளில் காத்திருக்கின்றனர்.

அதிக வங்கிக் கிளைகள், கருவூலங்களைக் கொண்டுள்ள பாரத ஸ்டேட் வங்கி, முன்னோடி வங்கிகளான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கிகளுக்கு போதிய அளவு பணத்தை ரிசர்வ் வங்கி வழங்கவில்லை. ஆனால், தனியார் வங்கிகளுக்கு 100, 500, 2000 ரூபாய் நோட்டுகளை அதிகம் வழங்கியுள்ளது.

ரிசர்வ் வங்கி நடவடிக்கை

இந்நிலையில், அரசு ஊழியர் சம்பளமும், ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியமும் 30-ம் தேதி மற்றும் 1-ம் தேதி வழங்க வேண்டி உள்ளது. ஆனால், போதிய பணம் வங்கிகளிடம் இல்லாததால் இப் பிரச்சினை எப்படி தீரும் என தெரியவில்லை. அத்துடன், வங்கி களில் ஊழியர்களுக்கும், பொது மக்களுக்கும் தேவையின்றி பிரச்சினைகள் ஏற்பட்டு பதற்றமான சூழ்நிலை ஏற்பட வாய்ப்பு உள் ளது. எனவே இப்பிரச்சினையத் தீர்க்க ரிசர்வ் வங்கி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு தாமஸ் பிராங்கோ கூறினார்.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘பண மதிப்பு நீக்க அறிவிப்பு செய்யப்படும் வரை, வாரம் ஒன்றுக்கு 100 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் குறைந்தபட்சம் ரூ.500 கோடிக்கு மேல் வரும். தற்போது ரூ.100 கோடி முதல் ரூ.200 கோடி வரைதான் வருகிறது. இதனால் அவற்றை அனைத்து வங்கிகளுக் கும் போதிய அளவு பிரித்து வழங்க முடியவில்லை. தேவையை சமாளிக்க பழைய 100 ரூபாய் நோட்டுகளை வங்கிகளுக்கு விநி யோகித்து வருகிறோம். மத்திய அரசு போதிய அளவு ரூபாய் நோட்டுகளை அச்சடித்து வழங்கும் வரை இப்பிரச்சினையில் இதே நிலைதான் நீடிக்கும்’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in