

சிவன் கோயில்களில் வாசிக்கப்படும் சிவபூதகண திருக்கயிலாய வாத்தியங்கள் தற்போது நாடு முழுவதும் பரவலாக இசைக்கப்பட்டு வருகின்றன. இந்த இசைக் கருவிகளை இசைக்க இளைஞர்கள் பெருமளவில் ஆர்வத்துடன் முன் வருகிறார்கள்.
சிவன் கோயில்களில் முன்பெல் லாம் சிவபூதகண வாத்தியங்கள் இசைக்கப்பட்டே சுவாமிக்கு அர்ச்ச னையும், வீதியுலாவும் நடத்தப்பட்டுள்ளது. இதில், ராஜவாத்தியம் ஒலித்தால் சுவாமி வீதியுலா வரு கிறார், தவண்டை வாசித்தால் கோயிலில் கால பூஜைகள் நடை பெறுகிறது, திருச்சின்னம் வாசித் தால் ஆதீனங்கள் வருகிறார்கள் எனவும் அறியப்பட்டது.
திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில், கொடுகொட்டி என்ற இசைக் கருவியைக்கொண்டு அபி ஷேகம் நடைபெறும் தகவல் இன்றும் பக்தர்களுக்கு தெரியப்படுத்தப் பட்டு வருகிறது.
தமிழகத்தில் சுமார் 300 ஆண்டு களுக்கும் மேலாக சிவாலயங்களில் இந்த வாத்தியங்கள் இசைக்கப்பட் டுள்ளன. பின்னர் நாதஸ்வரம் உள்ளிட்ட மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டதால், சிவபூதகண வாத்தியங்கள் இசைப்பது குறைந்து போனது.
தற்போது, தமிழகத்தில் நாதஸ் வரமும், கேரளாவின் செண்டை மேளத்துக்கு மாற்றாக சிவாலயங் களில் சிவபூதகண வாத்திய கருவி களைக் கொண்டு இசைக்கும் திருக் கூட்டக் குழுவினர் தமிழகம் முழு வதும் பரவலாகக் காணப்படுகின்றனர்.
தமிழகத்தில் இசைக்கப்பட்டு வந்த இந்த இசை, தற்போது வெளி மாநிலங்கள் மட்டுமின்றி, மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளிலும் இசைக்கப்பட்டு வருகிறது. இந்த இசையைக் கேட்டு ரசிக்கும்போதே பொதுமக்கள் தம்மை மறந்து நடனமாடத் தொடங்கிவிடுகின்றனர்.
இதுகுறித்து, கும்பகோணம் திருக்கயிலாய சிவபூதகண வாத்திய திருக்கூட்டக் குழுவின் ஒருங்கி ணைப்பாளர் பாலாஜி கூறிய போது, “முன்பெல்லாம் சிவன் கோயில்களில் இந்த இசைக் கருவி களை மட்டுமே இசைத்துள்ளனர். உடல், தவண்டை, நகரா, பிரம்ம தாளம், கொம்பு, திரிசனம், சங்கு, கொடுகொட்டி, திருச்சின்னம் என 30 வகையான இசைக் கருவிகள் இருந்துள்ளன. ஆனால், நாளடை வில் இந்த இசைக் கருவிகள் குறைந்துவிட்டன.
ஒருங்கிணைப்பாளர் பாலாஜி
புதுச்சேரியைச் சேர்ந்த ராமலிங் கம் என்பவர் திருவண்ணாமலையில் கடந்த பல ஆண்டுகளாக சிவ பூதகண வாத்தியங்களை வைத்து இசைத்து வந்துள்ளார். இவரின் முயற்சியால் இந்த இசையை மீண்டும் தமிழர்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என விரும்பி எல்லோருக்கும் அதைக் கற்றுக் கொடுத்துள்ளார். இதன் தொடர்ச்சி யாக, கடந்த 20 ஆண்டுகளாகத்தான் இந்த இசை மறுவடிவம் எடுத் துள்ளது.
12 முதல் 60 வயது வரை
தமிழகத்தில் சென்னை, கோவை, திருவாரூர், தஞ்சாவூர், கும்பகோணம், திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் இந்த இசைக் கருவிகளை இசைக்கும் குழுவினர் உள்ளனர். கும்பகோணத்தில் உள்ள எங்கள் குழுவில் மட்டும் சுமார் 200 பேர் உள்ளனர். 12 முதல் 60 வயது வரை உள்ள ஆண்களும், பெண்களும் உள்ளனர். அனைவ ரும் பகுதி நேரமாகத்தான் இந்தக் கருவிகளை இசைத்து வருகின்ற னர்.
சிவபூதகண வாத்தியம் என்ப தால் சிவன் கோயில்களில் மட்டுமே இசைக்கப்படும். இந்த இசைக் கருவிகளை வாசிக்க வருபவர்கள் பெரும்பாலும் இளைஞர்கள்தான். சென்னையில் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் பணியாற்று வோரில் தொடங்கி, கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், சொந்தமாக தொழில் செய்வோர் அதிகம் உள்ளனர்.
எல்லா சமூகத்தைச் சேர்ந்தவர் களும் இந்த இசைக் கருவிகளை இசைக்க வந்த பின்னர் மது அருந்துவது, அசைவம் உண்பது ஆகியவற்றை தாங்களாகவே தவிர்த்துவிடுகின்றனர். இதனா லேயே இளைஞர்கள் அதிக அள வில் இதில் நாட்டத்துடன் வரு கின்றனர். இசையை இசைக்கும் போது பலர் சிவதாண்டவ நடனம் ஆடுவார்கள். சேவையும், ஆன்மிக நாட்டமும் உள்ளவர் களை மட்டுமே இந்த இசைக் குழுவில் நாங்கள் சேர்த் துக்கொள்கிறோம்’’ என்றார்.
ஒருங்கிணைப்பாளர் பாலாஜி
கும்பகோணம் நாகேஸ்வரன் கோயில் வீதியுலாவின்போது, சிவபூதகண வாத்தியங்களை இசைக்கும் திருக்கயிலாய சிவபூதகண வாத்திய திருக்கூட்டத்தினர்.
உடல், தவண்டை, நகரா, பிரம்மதாளம், கொம்பு, திரிசனம், சங்கு, கொடுகொட்டி, திருச்சின்னம் என 30 வகையான இசைக் கருவிகள் இருந்துள்ளன. நாளடைவில் இந்த இசைக் கருவிகள் குறைந்துவிட்டன.