

ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த மத்திய அரசு சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ், இந் திய கம்யூனிஸ்ட் மாநிலச் செய லாளர் இரா.முத்தரசன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக பாமக நிறு வனர் ராமதாஸ் நேற்று வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளு படி செய்துள்ளது அதிர்ச்சி அளிக் கிறது. உச்ச நீதிமன்ற தடையினால் கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகை யின்போது ஜல்லிக்கட்டு போட்டி கள் நடைபெறவில்லை.
ஜல்லிக்கட்டு போட்டி காலங் காலமாக நடத்தப்பட்டு வருகிறது. இதனால் மனிதர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதே தவிர, காளை களுக்கு எந்த காயமும் ஏற்பட்ட தில்லை. கடந்த 2008 முதல் உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது என்பதால் காளைகள் கொடுமைப்படுத்தப்பட வாய்ப்பே இல்லை.
காட்சிப்படுத்துவதற்கு தடை செய்யப்பட்ட விலங்குகள் பட்டிய லில் இருந்து காளைகளை நீக்கு வதற்கு மத்திய அரசு சட்டம் கொண்டு வந்திருந்தால் உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு வேறுவிதமாக இருந்திருக்கும்.
ஆனால், பாம்புக்கு வாலையும், பூனைக்கு தலையையும் காட்டி யதுபோல செயல்பட்ட மத்திய அரசின் இரட்டை வேடம் தற்போது கலைந்துள்ளது. ஜல்லிக்கட்டு கண் டிப்பாக நடத்தப்படும் என வாரம் ஒருமுறை விமான நிலையத்தில் கூறி, மத்திய அரசின் நாடகத்துக்கு துணையாக இருந்தவர்கள் இப் போது என்ன செய்யப் போகிறார் கள்? தமிழக மக்களின் உணர்வு களை மத்திய அரசு மதிக்கிறது என்றால் நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஜல்லிக்கட்டு போட்டி நடத்து வது தொடர்பாக தமிழக அரசு தாக் கல் செய்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருப் பது வருத்தமளிக்கிறது. விலங்கு வதை எனக்கூறி ஜல்லிக்கட்டுக்கு தடை செய்வதைவிட, காளைகள் துன்புறுத்தப்படாமல் இருக்க சில விதிமுறைகளுடன் இந்த விளையாட்டை அனுமதிக்க வேண்டும்.
தமிழக மக்களின் உணர்வு களுக்கு மதிப்பளித்து வரும் தை பொங்கல் பண்டிகையின்போது ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உரிய சட்ட ஏற்பாடுகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.