Published : 03 Oct 2022 06:30 AM
Last Updated : 03 Oct 2022 06:30 AM

அனைவரும் காதி பொருட்களை அதிகம் வாங்க வேண்டும்: மத்திய அமைச்சர் எல்.முருகன் வேண்டுகோள்

சென்னை: காதி துறையை ஊக்குவிக்க, அனைவரும் காதி பொருட்களை அதிகம் வாங்க வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கேட்டுக் கொண்டுள்ளார்.

மகாத்மா காந்தி பிறந்த நாளையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சுதந்திர தினத்தின் நூற்றாண்டு விழாவை நோக்கி நமது நாடு வெற்றி நடை போடுகிறது. 100-வது சுதந்திர தினத்தில் அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி பெற்ற நாடாக இந்தியா மாறுவதற்கான ஒட்டுமொத்த நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டுள்ளன. காமராஜர் ஆட்சிக் காலம், தமிழகத்தில் பொற்காலமாக இருந்தது. மகாத்மா காந்தி பிறந்த தினத்தில் காதி துறையை ஊக்குவிக்கும் பொருட்டு, அனைவரும் காதி பொருட்களை அதிகம் வாங்க வேண்டும்.

காந்தியின் முக்கியக் கொள்கைகளில் ஒன்றான தூய்மையைப் பேண வேண்டும். அதற்காகவே தூய்மை இந்தியா இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் முதல்கட்டமாக வீடுகள், சுற்றுப்புறப் பகுதிகளை தூய்மையாக வைத்திருத்தலை தொடர்ந்து, இரண்டாவது கட்டமாக நாம் பணிபுரியும் அலுவலகங்களை சுத்தமாக பராமரிக்க தூய்மை இந்தியா2.0 இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து, சென்னை கோபாலபுரம் காதி கிராமோத்யோக் பவன் விற்பனை அங்காடிக்குச் சென்று, அங்கு காதி துணிகளை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வாங்கினார். கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணைய மாநில இயக்குநர் பி.என்.சுரேஷ் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x