பொதுநல சேவை வானொலியை மீட்டெடுக்க இயக்கம் தேவை: இதழியல் துறை பேராசிரியர் வலியுறுத்தல்

பொதுநல சேவை வானொலியை மீட்டெடுக்க இயக்கம் தேவை: இதழியல் துறை பேராசிரியர் வலியுறுத்தல்
Updated on
1 min read

பொதுநல வானொலி சேவையை மீட்டெடுக்க ஒரு இயக்கத்தைத் தொடங்க வேண்டும் என்று சென் னைப் பல்கலைக்கழக இதழியல் மற்றும் தொடர்பியல் துறைத் தலைவர் கோ.ரவீந்திரன் கேட்டுக் கொண்டார்.

இந்திய ஒலி ஒளிபரப்பாளர் மன்றம் மற்றும் சென்னைப் பல் கலைக்கழக இதழியல் மற்றும் தொடர்பியல் துறை சார்பில் பொது சேவை ஒலிபரப்பு தின விழா சென்னைப் பல்கலைக் கழகத்தில் நேற்று நடந்தது. இந்திய ஒலி ஒளிபரப்பாளர் மன்றத் தலைவர் வெ.நல்லதம்பி வரவேற்றார்.

இவ்விழாவிற்கு தலைமை வகித்த சேலம் பெரியார் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் மு.தங்கராசு பேசியதாவது:

இன்றைய சூழலில் ஊழலை ஒழிக்கும் நோக்கத்தோடு வானொலி ஒலிபரப்பு இருக்க வேண்டும். அரசியல் அவலங்களை நீக்க ஒலிபரப்பு பயன்பட வேண் டும். தீவிரவாதத்துக்கு எதிரான நிகழ்வுகளை அதிகமாக ஒலி பரப்ப வேண்டும். கள்ளப் பணத் தால் நாட்டிற்கு எத்தகைய தீங்கு ஏற்படும், அதை எப்படி ஒழிப் பது? என்பது பற்றி வானொலி மூலம் பொதுமக்களுக்குத் தெரி விக்க முயற்சிக்க வேண்டும். அறிவியலின் நலம், தீங்கு பற்றியும், மொழி, கல்வி குறித்தும் சொல்ல வேண்டும். சாதியக் கொடு மைகள், சுற்றுச்சூழல் தூய்மை பற்றி வானொலியில் பேசியாக வேண்டும். வானில் எண்ணற்ற விண்கலங்கள் சுற்றித் திரிவதால் தான் மாசு ஏற்பட்டு மழை பெய்யவில்லை. அதன் தீவிரத் தன்மையைக் குறைத்து இந்த மண்ணுலகம் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்பதை அறிவியலாளர்கள் மூலம் சொல்ல வேண்டும். மண்ணின் வளம் காப்பதற்கான நிகழ்ச்சிகளை வானொலியில் அதிகமாக ஒலி பரப்ப வேண்டும் என்றார் தங்கராசு.

சென்னைப் பல்கலைக்கழக இதழியல் மற்றும் தொடர்பியல் துறைத் தலைவர் கோ.ரவீந்திரன் பேசியதாவது:

இந்தியாவில் பிறக்கும் ஒவ் வொரு குழந்தையிடமும் அபரி மிதமான திறமை இருக்கிறது. இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டு களாக நமக்கு வாய்த்த பண்பாட்டு மரபணு மற்றும் இளைஞர்களிடம் உள்ள திறனை வெளிக் கொண்டு வர நமக்கு கிடைத்துள்ள அற்புத மான ஊடகம்தான் வானொலி மற்றும் பொதுநல சேவை வானொலி. இவற்றை நாம் மீட் டெடுக்க வேண்டும்.

இதற்காக நாம் ஒரு இயக்கத்தை தொடங்க வேண்டும். உள்ளூர் மொழிகளை வளர்த்தெடுக்க எல்லா மாநிலங்களிலும் இளைஞர் களால் அமைப்புகள் உருவாக்கப் பட்டுவிட்டன. அதுபோல பொது நல சேவை ஒலிபரப்பை மீட்டெடுப் பதற்கான இயக்கத்தைத் தொடங்க வேண்டும். அதற்காக இணைந்து செயல்படுவோம், உரக்கக் குரல் கொடுப்போம் என்றார் ரவீந்திரன்.

அதைத்தொடர்ந்து “தமிழ் வானொலி வரலாறு”, “தமிழர் வாழ்வில் தகவலியல்” என்ற இரண்டு நூல்கள் வெளியிடப் பட்டன. அகில இந்திய வானொலியின் துணைத் தலைமை இயக்குனர் ஏ.ஆர்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக தமிழ்ப் பேராயம் அமைப்பின் செயலாளர் கரு.நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in