

திமுக மாணவரணி மாவட்ட அமைப்பாளர்கள் கூட்டம், அந்த அணியின் தலைவர் இள.புகழேந்தி தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை வரைவுக்கு நாடு முழு வதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.ஆர்எஸ்எஸ் உணர்வாளர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட புதிய கல்விக் கொள்கையின் நகல், மறைமுக குலக்கல்வி திட்டம் போல உள்ளது. இதை திமுக மாணவரணி வன்மையாகக் கண்டிக்கிறது. புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக தமிழகம் முழுவதும் கருத்தரங்குகள் நடத்தப்படும். திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலினுடன் கலந்தாலோசித்த பிறகு போராட்டங்களும் நடத்தப்படும்.
நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தைப் பராமரிக்காமல் உள்ள தமிழக அரசின் செயல் கண்டிக்கத்தக்கது. இந்த நிலை தொடர்ந்தால் திமுக மாணவரணி மக்கள் திரள் போராட்டங்களை நடத்தும்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.