தினகரன் பத்திரிகை அலுவலகம் எரிப்பு வழக்கு: தலைமறைவு குற்றவாளிகள் 2 பேர் பற்றி தகவல் தெரிவித்தால் தலா ரூ.25 ஆயிரம் பரிசு

தினகரன் பத்திரிகை அலுவலகம் எரிப்பு வழக்கு: தலைமறைவு குற்றவாளிகள்  2 பேர் பற்றி தகவல் தெரிவித்தால் தலா ரூ.25 ஆயிரம் பரிசு
Updated on
1 min read

தினகரன் பத்திரிகை அலுவலக எரிப்பு வழக்கில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகள் 2 பேர் பற்றி தகவல் தெரிவித்தால் தலா ரூ.25 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என சிபிஐ சிறப்பு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.

மதுரையில் தினகரன் பத்திரிகை அலுவலகம் 2007-ல் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதில் அங்கு பணிபுரிந்த 3 ஊழியர்கள் உயிரிழந்தனர்.

இதுகுறித்து சிபிஐ (மத்திய புலனாய்வு துறை) சிறப்பு குற்றப்பிரிவு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. அதன்படி, சிபிஐ அதிகாரிகள், 10க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இந்த வழக்கு சம்பந்தமாக மதுரை கீரைத்துறை திருமுருகன் என்ற காட்டுவாசி முருகன், அதே கீரைத்துறையைச் சேர்ந்த தாயமுத்து இருவருக்கும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை பிடிவாரன்ட் பிறப்பித்தது.

இதைத் தொடர்ந்து இருவரும் தலைமறைவாகினர். இவர்கள் பற்றி தகவல் தெரிவிப்பவர் களுக்கு தலா ரூ.25 ஆயிரம் பரிசாக வழங்கப்படும் என சிபிஐ தெரிவித்துள்ளது.

மேலு தகவல் தெரிந்தவர்கள் காவல்துறை கண்காணிப்பாளர், மத்திய புலனாய்வுத்துறை, சிறப்பு குற்றப்பிரிவு, மூன்றாம் தளம், ராஜாஜி பவன், பெசன்ட் நகர், சென்னை -600090 என்ற முகவரிக்கு நேரில் வந்து தெரிவிக்கலாம். அல் லது 044 24917144, 044 24916314, 044 28273186, 9444650160 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ள லாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in