

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு நகை கடைகளில் 30% விற்பனையாகி உள்ளது.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் புதிய அறிவிப்பு அமலுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து அதிகளவில் பணம் வைத் திருந்தவர்கள் நேற்று முன்தினம் இரவு அருகே உள்ள நகை கடைகளுக்கு சென்று நகை வாங்கியுள் ளனர்.
குறிப்பாக நேற்று முன்தினம் இரவு 11 மணி வரையில் தியாகராயநகரில் பல்வேறு நகைக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. வந்திருந்தவர்கள் ரூ.500, ரூ.1,000 நோட்டுகளைக் கொடுத்து புதிய நகைகளை வாங்கிச் சென்றனர்.