

பணப் பரிமாற்றம் சீரடையும் வரை அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு மாத ஊதியத்தை ரொக்கமாக வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. அதில் நிறைவேற் றப்பட்ட தீர்மானங்கள் குறித்து நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் தமிழகத்தில் உள்ள 4 ஆயிரத்து 600 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங் களும், மத்திய கூட்டுறவு வங்கி களும் முடங்கியுள்ளன. இதனால் கிராமப்புற பொருளாதாரமே பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு சங்கங்களில் பணப் பரிவர்த்தனை செய்ய அனுமதிக்க வேண்டும்.
பணப் பரிமாற்றம் சீரடையும் வரை மத்திய, மாநில அரசு, பொதுத் துறை மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு ரொக்கமாக மாத ஊதியம் வழங்க வேண்டும்.
முதியோர், முறைசாரா தொழி லாளர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம், மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தில் வழங்கப்படும் ஊதியம் உள்ளிட்ட சமூக நல பணப் பயன்கள் அனைத்தையும் ரொக்கமாகவே வழங்க வேண்டும். மாத ஊதியத்தை ரொக்கமாக வழங்குமாறு தனியார் நிறுவனங்களுக்கு அரசு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.