காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதி

இரா.நல்ல கண்ணு | கோப்புப் படம்
இரா.நல்ல கண்ணு | கோப்புப் படம்
Updated on
1 min read

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்ல கண்ணு(97) காய்ச்சல் ஏற்பட்ட காரணத்தால் சிகிச்சைக்காக நேற்று மாலை 6.15 மணியளவில் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு வந்தார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் காய்ச்சல் மற்றும் சிறுநீரக தொற்று பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தனர். இதை தொடர்ந்து, மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தொடர்சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் முதல்வர் தேரணிராஜன் கூறியது: நல்லகண்ணுவின் உடல்நிலைசீராக உள்ளது. பொதுப்பிரிவுமருத்துவர்கள், சிறுநீரகவியல் துறை மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேலும், எச்1என்1 வைரஸ், கரோனா, டெங்கு போன்ற காய்ச்சல் உள்ளதாஎன பரிசோதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்துமருத்துவ குழுவினர் அவரது உடல் நிலையைகண்காணித்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in