விசிக நிலைப்பாட்டால் ம.ந.கூட்டணியில் நெருடல் இல்லை: வைகோ கருத்து

விசிக நிலைப்பாட்டால் ம.ந.கூட்டணியில் நெருடல் இல்லை: வைகோ கருத்து
Updated on
1 min read

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

மக்கள் நலக்கூட்டணி தமிழகத் தில் ஒரு அணுகுமுறையிலும், புதுச்சேரியில் வேறு அணுகுமுறை யிலும் செயல்படுகிறது. புதுச்சேரி யில் நடக்கவுள்ள நெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியை விசிக ஆதரிக்கிறது. இந்த முடிவை விசிக தனியாகவே அறிவித்தது. புதுச்சேரி இடைத்தேர் தலில் மதிமுக எந்தக் கட்சியையும் ஆதரிக்கவில்லை. அதே போல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் யாரையும் ஆதரிக்கவில்லை என்று அறிவித்துள்ளது.

இதையொட்டி, தமிழகத்தில் ம.ந.கூட்டணியில் நெருடல் இருப்ப தாக கூறுவது உண்மையல்ல. ம.ந. கூட்டணியில் உள்ள 4 கட்சித் தலை வர்களும் என்னை ஒருங்கிணைப் பாளராக தேர்வு செய்தனர். தேர் தலுக்குப் பிறகும் என்னையே அதன் ஒருங்கிணைப்பாளராக தொடர வேண்டும் என்று கேட்டுக் கொண்ட னர். நான் எப்போதும் பதவிக்காக ஆசைப்பட்டதில்லை. ம.ந.கூட்டணி யில் எந்த பிரச்சினையும் இல்லை.

இவ்வாறு வைகோ கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in