மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவல் விருது

மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவல் விருது
Updated on
1 min read

சென்னை: காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு மதுவிலக்கு அமலாக்க பிரிவில் சிறப்பாக செயல்பட்ட 5 காவல்துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: காவல்துறை தலைமையகத்தில் மத்திய நுண்ணறிவு பிரிவில் ஆய்வாளராக உள்ள த.எ.பிரியதர்ஷினி, தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் கா.ஜெயமோகன், சேலம் மண்டலம் மத்திய நுண்ணறிவு பிரிவு உதவி ஆய்வாளர் ச.சகாதேவன், விழுப்புரம் மண்டலம் மத்திய நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆய்வாளர் பா.இனாயத் பாஷா, செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் காவல் நிலைய தலைமைக் காவலர் சு.சிவனேசன் ஆகியோருக்கு மதுவிலக்கு அமலாக்கபணியில் பாராட்டத்தக்க வகையில் பணியாற்றியமைக்காக காந்தியடிகள் காவலர் விருது வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இவ்விருது, முதல்வரால், அடுத்த ஆண்டு ஜன.26 குடியரசு தினத்தில் வழங்கப்படும். விருதுடன், பரிசுத் தொகையாக தலா ரூ.40 ஆயிரம் வழங்கப்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in