

காலாவதியான 500, 1000 ரூபாய் நோட்டுகளை ஹவாலா தரகர்கள் 40 சதவீத தள்ளுபடியில் பெற்றுக்கொள்வதாகவும், தங்க விற்பனை மற்றும் பரிமாற்றம் முறைகேடாக நடப்பதாகவும் சந்தேகம் எழுந்ததை அடுத்து, சென்னையில் நகைக்கடைகள் உட்பட 8 இடங்களில் வருமான வரித் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய ஆவ ணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8-ம் தேதி இரவு அறிவித் தார். பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள், தபால் அலுவலகங்களில் கொடுத்து விட்டு, புதிய பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட் டது. ஒரு நாளில் அதிகபட்சமாக ரூ.4,000 வரை மட்டுமே பெற முடியும் என்று கட்டுப்பாடு விதிக்கப் பட்டது. அதிக அளவில் ஒப்படைக் கப்படும் நோட்டுகளுக்கு உரிய கணக்கு காட்டாவிட்டால் 200 சதவீத அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது.
இதனால், கணக்கில் காட்டாமல் அதிக அளவில் கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்திருந்தவர்களின் நிலைமை சிக்கலானது. அவர்கள் பணத்தை மாற்ற முடியாமல் தவித்தனர். சிலர் அவசர அவசர மாக அதிக அளவில் தங்கம் வாங்கி பதுக்கினர்.
இதற்கிடையில், நகை வர்த்த கர்களும், ஹவாலா தரகர்களும் காலாவதியான நோட்டுகளை 40 சதவீத தள்ளுபடியில் பெற்றுக் கொள்வதாக புகார் எழுந்தது. இதனால், அவர்கள் சட்டவிரோத மாக லாபம் அடைவதாகவும் கூறப் பட்டது. தங்க விற்பனை, பரிமாற் றத்திலும் முறைகேடுகள் நடந்திருக் கலாம் என சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து, டெல்லி, மும்பை, சண்டீகர், லூதியானா, ஜலந்தர் உட்பட நாட்டின் பல முக்கிய நகரங்களிலும் வருமான வரித் துறையினர் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்நிலையில், சென்னை பாரி முனை என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள நகைக்கடை, அதே பகுதியில் உள்ள மற்றொரு நகைக்கடை, சில ஏஜென்ட்களின் வீடுகள் உட்பட சென்னையில் 8 இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று மாலை ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர். சுமார் 100 அதிகாரிகள் 8 குழுக்களாக பிரிந்து இந்த சோதனையை நடத்தியதாக வருமான வரித் துறை அதிகாரிகள் தெரி வித்தனர்.
வீடுகள், கடைகளின் வெளிப் பக்க கதவு மூடப்பட்டு சோதனை நடந்துள்ளது. வீடுகளில் இருந் தவர்கள் வெளியேறவோ, வெளியில் உள்ளவர்கள் உள்ளே வரவோ அனுமதி மறுக்கப்பட்டு, விசாரணை நடந்துள்ளது. கடை களிலும் சோதனையின்போது யாரும் உள்ளே அனுமதிக்கப்பட வில்லை. உள்ளே இருந்த வாடிக்கையாளர்களையும் வெளியே அனுப்பிவிட்டு சோதனை நடத்தப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்டவர்களின் பணம் மற்றும் தங்கப் பரிமாற்றம் குறித்து அடுக்கடுக்காக பல கேள்விகளை அதிகாரிகள் கேட்டுள்ளனர்.
இது சம்பந்தமான முக்கிய ஆவணங்கள் அங்கிருந்து கைப்பற்றப்பட்டதாக கூறப்படு கிறது. இதுபற்றிய மேலும் விவரங் களை வெளியிட அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.