

தேசிய மக்கள் கட்சி சார்பில் அரவக்குறிச்சியில் போட்டியிடும் வேட்பாளர் கீதா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘‘அரவக்குறிச்சி தொகுதி முழுவதும் பணப்பட்டுவாடா இந்த முறையும் தடையின்றி நடந்துள் ளது. இதுதொடர்பாக தேர்தல் அதிகாரியிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே இந்த தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும்’’ என அதில் கோரியிருந்தார்.
நேற்று இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு, ‘‘இதே கோரிக்கையுடன் தொடரப்பட்ட பல வழக்குகள் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன. தேர்தல் நடவடிக்கை தொடங்கிய பிறகு அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என ஏற்கனவே சுட்டிக் காட்டியுள்ளோம். அதை அறிந்தும் நீதிமன்ற நேரத்தை வேண்டு மென்றே வீணடித்த காரணத்திற் காக மனுதாரர் கீதாவுக்கு ரூ. 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக் கிறோம்’’ என உத்தரவிட்டனர். மனுதாரரின் வழக்கறிஞர் விடுத்த வேண்டுகோளை ஏற்று அபராதம் ரூ. 3 ஆயிரமாக குறைக்கப்பட்டது.
இதேபோல் அரவக்குறிச்சி, தஞ் சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதி தேர்தல் அதிகாரிகளுக்கு கூடுதல் பயிற்சி வழங்க வேண்டும் எனக் கோரி ராம்குமார் ஆதித்தன் என்பவர் மனுதாக்கல் செய்திருந் தார். நேற்று இந்த மனுவை விசா ரித்த தலைமை நீதிபதி அடங்கிய முதல் அமர்வு, மனுதாரரின் கோரிக் கையை பரிசீலிக்க உத்தரவிட்டனர்.
இதேபோல் அரவக்குறிச்சியில் மீண்டும் பணப்பட்டுவாடா தடை யி்ன்றி நடந்து வருவதாகவும், அதை தடுக்க கூடுதல் பார்வை யாளர்களையும், பறக்கும் படை யினரையும் பணியமர்த்த வேண்டு மென பாமக வேட்பாளர் பாஸ்கரன் ஒரு மனுவை தாக்கல் செய்தார். நேற்று இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு, மனுதாரரின் கோரிக்கை குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு மட்டுமே உள்ளதாகக் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.