

சென்னை: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு களப்பணிகளை கண்காணிப்பதற்காக சென்னை குடிநீர் வாரியம் சிறப்பு அலுவலர்களை நியமனம் செய்துள்ளது.
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு களப்பணிகளை கண்காணிப்பதற்காக சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் அனைத்து பகுதிகளிலும் சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திருவொற்றியூர் முதல் சோழிங்கநல்லூர் வரை 15 பகுதிகளுக்கு மேற்பார்வை பொறியாளர்கள் மற்றும் செயற்பொறியாளர்கள் சிறப்பு அலுவலர்களாக நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இவர்கள் பருவமழை காலங்களில் சென்னை குடிநீர் வாரியம் மேற்கொள்ளும் பணிகளை கண்காணிப்பதோடு, மாநகராட்சி மின்சார வாரியம் மற்றும் நெடுஞ்சாலை துறையுடன் இணைந்து ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ளவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் தங்கள் பகுதியில் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் தொடர்பான குறைகளை சிறப்பு அலுவலர்களை மூலம் தொடர்பு கொண்டு தீர்வைப் பெறலாம் என்று சென்னை குடிநீர் வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுளளது.