

நியாயவிலைக் கடைகளில் வாங் கிய பொருட்களைவிட கூடுதல் பொருட்கள் வாங்கப்பட்டதாக வாடிக்கையாளரின் செல்போனுக்கு குறுந்தகவல் வந்தால், உடனடியாக உயரதிகாரிகளிடம் புகார் அளிக்கலாம் என உணவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள நியாயவிலைக் கடையில், குடும்ப அட்டைதாரர் ஒருவர் சர்க்கரை மட்டும் வாங்கியுள்ளார். ஆனால், பொது விநியோகத் திட்ட மென்பொருள் மூலம் அவருக்கு வந்த குறுந்தக வலில் அவர் சர்க்கரை, பாமாயில் வாங்கியதாக குறிப்பிடப்பட்டிருந் தது. அதிர்ச்சி அடைந்த அவர், கடைக் குச் சென்று விற்பனையாளரிடம் இதுபற்றி விசாரித்துள்ளார். விற் பனையாளர் மழுப்பலாக கூறியுள் ளார். அங்கு முறைகேடு நடப்பதை உணர்ந்த அந்த அட்டைதாரர் இதை உயரதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.
தமிழக உணவுத் துறையின் சமீ பத்திய முயற்சியால்தான் இது சாத் தியமாகியுள்ளது. முன்பெல்லாம், நாம் என்ன பொருள் வாங்குகிறோம், விற்பனையாளர்கள் எதற்கு வசூலிக் கின்றனர் என்பதே தெரியாது. கடந்த மாதம் வாங்காத பொருளுக் கெல்லாம் அட்டையில் இந்த மாதம் பதிவு செய்வதையும் பார்க்க முடியும். இதைக் கேட்டால், மழுப்பலாகவும், சில நேரத்தில் மிரட்டலாகவும் விற் பனையாளர்கள் பதில் கூறுவர். இப்போதெல்லாம் விற்பனையாளர் கள் தவறு செய்யவே முடியாத அளவுக்கு பொது விநியோகத் திட்டம் முறைப்படுத்தப்பட்டுள்ளது.
‘பாயின்ட் ஆஃப் சேல்’ கருவி
தற்போது புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைக்கு பதிலாக, பொது மக்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டத்துக்கான முதல் அடிதான் விற்பனை முனைய இயந்திரம் எனப் படும் ‘பாயின்ட் ஆஃப் சேல்’ கருவி. தமிழகம் முழுவதும் 34 ஆயிரத்துக் கும் மேற்பட்ட நியாயவிலைக் கடை களுக்கு இது வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உணவுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
சிறிய பெட்டி அளவிலான இந்த கருவியில் ஸ்கேனிங், தொடுதிரை வசதி உள்ளது. சிம்கார்டு மூலம் இணைய வசதி அடிப்படையில் செயல்படும் இக்கருவியில் குடும்ப அட்டைதாரர் விவரங்கள், ஆதார் அட்டை விவரங்கள், செல்போன் எண் உள்ளிட்டவற்றை இணைக்க முடியும்.
கடைக்கு சப்ளை செய்யப்படும் பொருட்கள் பற்றிய விவரங்களை பதிவு செய்யும் வசதியும் இதில் தரப்பட்டுள்ளது. இக்கருவி இணைய வசதி மூலம், குடும்ப அட்டைதாரர் களின் கைபேசி, பொது விநியோகத் திட்ட அலுவலகம், உணவுப்பொருள் வழங்கல் துணை ஆணையர், வட்டார வழங்கல் அதிகாரிகள், உணவுத் துறை செயலர் அலுவலகம், முதல் வர் தனிப்பிரிவு அலுவலர் அலுவல கம் என பல்வேறு நிலைகளிலும் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், துறை அமைச்சரோ, செய லரோ, அதிகாரிகளோ தங்கள் கைபேசி, கணினியில் இருந்து ஒவ் வொரு கடையின் விவரங்களையும் பெற முடியும்.
அதேபோல, ‘TNEPDS’ எனப்படும் செயலியை ஸ்மார்ட்போனில் பதி விறக்கம் செய்துள்ள குடும்ப அட்டை தாரர்கள் கடை இருப்பு விவரங் களை வீட்டில் இருந்தபடியே அறிய லாம். இது தவிர, கடைகளில் பொருள் வழங்கும்போது, குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்கப்பட்ட பொருள் குறித்த விவரத்தை, குறுந்தகவலாக குடும்ப அட்டைதாரர் இணைத்துள்ள செல்போனுக்கு அனுப்பும் வசதி யும் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், நியாயவிலைக்கடை விற் பனையாளர்கள் தவறு செய்தால் உடனடியாக குடும்ப அட்டைதார ருக்கு தெரிந்துவிடும். ஆதாரம் கையில் இருப்பதால் புகார் அளிப்பதும் சுலபம். தற்போது கடை விற்பனையாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, விவரங்களை முழுமையாக பதிவு செய்யும் பணி நடக்கிறது. அதன் பின்னர், குறுந்தகவல் அனுப்பும் பணி முழுவீச்சில் தொடங்கும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
‘பாயின்ட் ஆஃப் சேல்’ கருவியில் மேற்கண்ட விவரங்கள் அனைத்தும் இணைத்து முடிக்கப்பட்டிருந்தால், அத்தகைய கடைகளில், அச்சடிக் கப்பட்ட ரசீது புழக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டுவிடும். இதுபற்றி உண வுத் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘அரியலூர், பெரம்பலூர் மற்றும் தென் மாவட்டங்களில் பல பகுதி களில் உள்ள கடைகளில், பொருள் வாங்குவற்கு, அதனுடன் இணைக் கப்பட்ட செல்போனையும் எடுத்துச் செல்ல வேண்டும். விற்பனையாளர் இயந்திரத்தில் பொருளை பதிவு செய் ததும், உடனடியாக செல்போனுக்கு குறுந்தகவல் செல்லும். அதைக் காட்டினால் மட்டுமே பொருளை எடை போடுபவர் வழங்குவார். இதனால், கடை விற்பனையாளர் தவறுதலாக பதிவு செய்தாலும் கண்டுபிடித்து விடலாம். தமிழகம் முழுவதும் இந்த நடைமுறை அடுத்த மாதம் அமலுக்கு வந்துவிடும்’’ என்றனர்.
எங்கு புகார் தெரிவிப்பது?
நியாயவிலைக் கடைகளில் கூடுதல் பொருட்கள் வாங்கியதாக ரசீது வழங்குவது, குறுந்தகவலில் உண்மைக்கு மாறான தகவல்கள் வருவது, பொது விநியோகத் திட்டத்தில் உள்ள குறைபாடுகள் குறித்து 044-28592828, 94451 90660, 94451 90661, 94451 90662 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் பொருட்கள் சீராக விநியோகிக்கப்படுவதைக் கண்காணிக்க சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று உணவுத் துறை அமைச்சர் சமீபத்தில் அறிவித்தார். இது தவிர, அந்தந்த நியாயவிலைக் கடைகளில் உதவி ஆணையர், வட்டார வழங்கல் அதிகாரி, உணவுப்பொருள் வழங்கல் துறை உயர் அதிகாரிகளின் செல்போன் எண்கள், அலுவலக தொலைபேசி எண்கள் எழுதிவைக்கப்பட்டிருக்கும். அந்த எண்களிலும் புகார் தெரிவிக்கலாம் என்று உணவுத் துறையினர் தெரிவித்தனர்.