

உணவு தானியங்களுக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என திமுக வர்த்தகர் அணி கோரிக்கை விடுத்துள்ளது.
திமுக வர்த்தகர் அணி மாநில நிர்வாகிகள், மாவட்ட அமைப்பாளர் கள் கூட்டம் மாநிலச் செயலாளர் காசி முத்துமாணிக்கம் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து காசி முத்துமாணிக்கம் நிருபர்களிடம் கூறியதாவது:
காவிரிப் பிரச்சினையில் அனைத் துக் கட்சி கூட்டத்தை கூட்டாத தமிழக அரசுக்கு கண்டனம், காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும், அரிசி உள்ளிட்ட உணவு தானியங்களுக்கு ஜிஎஸ்டி வரியி லிருந்து விலக்கு அளிக்க வேண்டும், தமிழகத்தில் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்திய அதிமுக அரசுக்கு கண்டனம், தொழில் தொடங்குவதற்கு ஏற்ற மாநிலங்களின் தரவரிசைப் பட்டியலில் தமிழகம் பின்தங்கியதற்கு கண்டனம், கடந்த ஆண்டு பெய்த கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.
வர்த்தகர் அணி இணைச் செயலாளர் ம.கிரகாம்பெல், திமுக செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.