கம்யூனிஸ்ட் மாநாடு: ஸ்டாலின் இன்று கேரளா பயணம்

கம்யூனிஸ்ட் மாநாடு: ஸ்டாலின் இன்று கேரளா பயணம்
Updated on
1 min read

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று திருவனந்தபுரம் செல்கிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில மாநாடு, திருவனந்தபுரம் வழுதக்காட்டில் உள்ளதாகூர் தியேட்டரில் நேற்று தொடங்கியது. அக்.3 வரை நடைபெறும் இந்த மாநாட்டில் இன்று ‘கூட்டாட்சி மற்றும் மத்திய - மாநில உறவு’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறுகிறது.

இதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உரையாற்றுகிறார். அவருடன் கேரள முதல்வர் பினராயிவிஜயனும் பங்கேற்கிறார். மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்றுகாலை 11.30 மணிக்கு முதல்வர் ஸ்டாலின், திருவனந்தபுரம் புறப்பட்டுச் செல்கிறார். மாநாட்டில் பங்கேற்று, இன்று இரவே அவர் சென்னை திரும்புகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in