உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தேர்தலில் 80 சதவீத வாக்குகள் பதிவு: இன்று காலை வாக்கு எண்ணிக்கை

உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தேர்தலில் 80 சதவீத வாக்குகள் பதிவு: இன்று காலை வாக்கு எண்ணிக்கை
Updated on
1 min read

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தலில் நேற்று 80 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணிக்கை இன்று காலை நடக்கிறது.

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்( எம்ஹெச்ஏஏ) சங்கத்தில் 4 ஆயிரத்து 838 உறுப்பினர்கள் உள்ளனர். 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த சங்கத்துக்கு தேர்தல் நடைபெறும். கடந்த 2013-ல் நடை பெற்ற தேர்தலில் தேர்வான நிர்வாகி கள் உயர் நீதிமன்றத்தி்ல் தொடரப்பட்ட வழக்கின் காரணமாக தற்போது வரை தொடர்ந்து பதவியில் நீடித்து வந்தனர்.

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம், உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கம், லா அசோசியேஷன் ஆகிய 3 சங்கங்களுக்கும் முறையாக தேர்தல் நடத்த மூத்த வழக்கறிஞர் ஏ.ஏ.செல் லையா தலைமையில் தேர்தல் ஒருங்கிணைப்புக்குழு அமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஏற்கெனவே அறிவித்தபடி சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் தலைவர் பதவிக்கு எஸ்.அறிவழகன், பி.எம்.துரைசுவாமி, எஸ்.காசிராம லிங்கம், ஜி.மோகனகிருஷ்ணன், எல்.முருகவேலு, கே.சத்யபால், சி.விஜயகுமார் ஆகிய 7 பேர் போட்டியிட்டனர். துணைத் தலைவர் பதவிக்கு ஏ.அப்துல் ரஹ்மான், ஜார்ஜ் சார்லஸ், எம்.ஜெயக்குமார், என்.வி.கோடீஸ்வரன், மதிவாணன், ஏ.மோகன்தாஸ், ஆர்.முரளி, எஸ்.முத்துராமன், பி.வி.எஸ்.பத்மா, பி.எஸ்.என்.பிரபாகரன், எம்.ஏ.ருவா, ஆர்.சுதா, விக்டர் சாமுவேல் ஆகியோ ரும், செயலாளர் பதவிக்கு பி.வி.இளங்கோ, ஆர்.கிருஷ்ண குமார், எஸ்.சசிக்குமார், ஆர்.சிவ சங்கர் ஆகியோரும், பொருளாளர் பதவிக்கு சி.ஆரோக்கியதாஸ், எஸ்.காமராஜ், டி.சிவசண்முகம், கே.சுப்ரமணியன் ஆகியோரும் போட்டியிட்டனர். நூலகர் பதவிக்கு 10 பேரும், முதுநிலை செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு 18 பேரும், இளநிலை செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு 23 பேரும் போட்டியிட்டனர். இந்த தேர்தல் வாக்குப்பதிவு சட்டப்பேரவைத் தேர்தல் போல கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் கண்காணிக்கப்பட்டது. தேர்தலில் மொத்தம் 80 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் அதிகாரி ஏ.ஏ.செல்லையா தெரிவித்தார். வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in