

தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சிறு வியாபாரிகள் சங்கத்தினர் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சாலையோர வியாபாரிகளின் மத்திய பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும், அதுவரை சாலையோர கடைகளை அப்புறப் படுத்தக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாநகர சிறு வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கவனஈர்ப்புப் போராட்டம் நேற்று காலை நடந்தது.
சென்னை ஆட்சியர் அலுவ லகம் அருகே நடந்த கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தலைவர் சி.திருவேட்டை, பொதுச்செய லாளர் பா.கருணாநிதி உள்பட 100-க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள் கலந்துகொண்டு கோரிக்கை முழக்கமிட்டனர்.
அப்போது, தலைவர் சி.திருவேட்டை கூறியதாவது:
உயர்நீதிமன்றத் தீர்ப்பு எனக் கூறி சென்னை மாநகரில் பல இடங்களில் காவல்துறையும், மாநகராட்சியும் சாலையோர வியாபாரிகளை அப்புறப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக என்என்சி போஸ் சாலை, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, உஸ்மான் சாலை, லஸ் சர்ச் சாலை பிராட்வே பேருந்து நிலையம் போன்ற இடங்களில் அப்புறப்படுத்தி வருகின்றனர். சாலையோர வியாபாரிகள் பாதுகாப்புக்காக மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். அதுவரை சாலையோர வியாபாரிகளை அப்புறப்படுத்தக் கூடாது என்றார்.