

தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அதன் ஒருபகுதியாக கடந்த 2013-ம் ஆண்டு முதல் தமிழ் மொழி வளர்ச்சியை கணினியில் அனைத்து நிலைகளிலும் பயன்படுத்தும் வகையில் சிறந்த மென்பொருளை உருவாக்குபவர்களுக்கு ‘முதல்வர் கணினித் தமிழ் விருது’ வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு முதல்வர் கணினித் தமிழ் விருதுக்கான விண்ணப்பங்களை அளிக்கலாம். போட்டிக்குரிய மென்பொருள் 2013,14 மற்றும் 15-ம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டதாக இருத்தல் வேண்டும். இவ்விருதுக்கான விண்ணப்பம், விதி முறைகளை தமிழ் வளர்ச் சித்துறையின் இணைய தளமான ‘www.tamilvalar chithurai.org’ யில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப் பங்கள் டிசம்பர் 31-ம் தேதிக்குள், ‘தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி வளாகம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை-600 008’ என்ற முகவரியில் வந்து சேர வேண்டும்.